Tuesday, June 18, 2013

சிலப்பதிகாரத்தில் கண்ணகி வழிபாடு

ஆசிரியர் : சகவீரன்
இளங்கோவடிகள் செய்த சிலப்பதிகாரம் என்ற நூலின் கதை, சில நீக்கங்களுடனும் புதுச் சேர்க்கைகளுடனும்,பொதுமக்களுக்கேற்ற வகையில் ஒரு புது இலக்கியமாக செய்யப்பட்டுள்ளது. அது கண்ணகி வழக்குரை என்றுஈழத்தின் கிழக்கு மாகாணத்திலும், கோவலனார் கதை என்று வடக்கு மாகாணத்திலும், சிலம்பு கூறல் என்றுமுல்லைத்தீவுப்பகுதியிலும் வழங்கி வருகின்றது. கண்ணகி வழக்குரை என்ற நூல் வரம்பெறு காதை (கோவலனார்பிறந்த கதை) (அம்மன் பிறந்த கதை), கப்பல் வைத்த காதை (மீகாமன் கதை) (துரியோட்டு) (கப்பல் வதை;தல்),கடலோட்டு காதை (வெடியரசன் போர்) (நீலகேசி புலம்பலும் வீரநாரணன் கதையும்) (மணிவாங்கின கதை) (விளங்குதேவன் போர்), கலியாணக் காதை, மாதவி அரங்கேற்று காதை, பொன்னுக்கு மறிப்புக் காதை (பொன்னுக்குமறிப்பு) (இரங்கிய காதல்), வழிநடைக்காதை (வயந்தமாலை தூது) (வழிநடை), அடைக்கலக் காதை, கொலைக்களக்காதை (சிலம்பு கூறல்) (கொலைக்களக் காதை) (அம்மன் கனாக்கண்ட கதை) (உயிர்மீட்புக் கதை), வழக்குரைத்தகாதை, குளிர்ச்சிக்காதை (குளிர்ச்சி) (வழக்குரை காவியம்) என்ற அதிகாரங்களை கொண்டு விளங்குகின்றது.கோவலனார் கதை என்ற நூலும் பெரும்பாலும் இதே அதிகாரங்களைக்கொண்டு விளங்கக் காணலாம். சிற்சிலஅதிகாரப்பெயர்கள் சொல்லளவில் வேறுபட்டிருப்பினும், பொருளளவில் ஒன்றேயாதல் நோக்கத்தக்கதாகும்.இந்நூல் சிலப்பதிகாரக் காதையை பெருமளவில் தழுவியுள்ளதேனும், இதன் முதல் மூன்று அதிகாரங்களும்சிலப்பதிகாரத்தில் இல்லாத பகுதிகளாகும். சிலப்பதிகார வஞ்சிக்காண்ட பகுதியும் இதில் இடம்பெறவில்லை.
கண்ணகி வழக்குரை அரங்கேற்றுக்காதையில் உள்ள
அவனிபுகழ் குடிநயினாப் பணிக்கனெனு மவன்மிகுந்தோன்
கவளமதக் களிற்றண்யல் காங்கேசன் தேவையர்கோன்
தவமென்ன விளங்குபுகட் சகவீரன் தாரணியிற்
சிவனருளா லிக்கதையைச் செந்தமிழ்ப்பா மாலைசெய்தான்
என்னும் செய்யுள், இந்நூலினை இயற்றியவன் சகவீரன் என்றும், அவன் காங்கேசன் என்ற தேவையர்கோன்குலத்தவனென்றும் தெரிவிக்கின்றது. தேவையர்க்கொன் என்பது யாழ்ப்பாணத்தில் இருந்து அரசு செலுத்தியஆரியச்சக்கரவர்த்திகளை குறிக்கும் பெயராகும். மேலும் இந்நூலின் கண் ஆரியச் சக்கரவர்த்தியினை புகழ்ந்துகூறும்,
ஆர்த்ததிற லாரியர்கோன் அடலரசர் மணவாளன்
கீர்த்திதனைப் பாடுவார்க்குக் கிலேசமெல்லாம் நீங்குவபோல்
ஏத்தரிய சந்திரன்தன் இயல்பினுடன் தானெழவே
மிகுந்தபுவி தனிற்பரந்த மிக்கவிருள் நீங்கியதே
என்பது போன்ற செய்யுள்கள் இந்நூல் ஆரியச்சக்கரவர்த்தி ஆட்சிபுரிந்த காலத்தே செய்யப்பட்டதென்பதனைக்காட்டும். பெரும்பாலும் தாழிசையாற் செய்யப்பட்ட இந்நூலிற் சிந்தும் வெண்பாவும், அகவலும் இடையிடையேஇடம்பெற்றுள்ளன.
சிலப்பதிகாரத்தில் இலக்கிய நயம்.

சிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ்சமுதாயத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் விளக்கும் வரலாற்று நூல்.

''
மனிதர் யாரும் பண்போடு, பிறருக்கும் பயன்படும் நெறியோடு , உயிருக்கும் அஞ்சாது நீதிக்குப் போராடும் உணர்வோடு வாழ்ந்தால், அவரை இந்த உலகம் தெய்வமாகக் கொண்டாடும்'' என்ற உண்மையை கண்ணகி மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார் இளங்கோவடிகள். தமிழ்ச் சமுதாயத்தின் நல்வினைப் பயன் காரணமாக வரலாற்றுப் பின்னணியை நமக்கு படம் பிடித்துக் காட்டும் சாசனமாக ஒரு காவிய மாளிகையைச் சமைத்துத் தந்துள்ளார். தமிழன் என்னும் மனவுணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதி உண்மை என நிறுபனம் காட்டுவது சிலப்பதிகாரம்.
சிலப்பதிகாரக் கதை சிறிதளவே கற்பனை தழுவிய வரலாறு ஆகும். காப்பியத் தலைவனும் தலைவியும் தமிழ் இனத்தார் பெருமைப்படத்தக்க வரலாற்று நாயகியும் நாயகனுமாவர். தமிழனத்தின் வரலாற்று களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது. தமிழர்களின் பண்பாடுகளை தெளிவாகக் காட்டும் தமிழ் நூல் சிலப்பதிகாரத்திற்குப் பின்பு தோன்றவில்லை. இது , அந்தப் பெருங்காப்பியத்திற்குரிய தனிப்பெருமையாகும். ஆகவேதான் , '' நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ் நாடு '' என்று டாக்டர் சாமிநாதய்யரும் ; '' யாமறிந்த புலவரிலே... இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனும் பிறந்தில்லை... '' பாரதியும் சிறப்பித்துள்ளனர்.
சிலப்பதிகாரத்தின் கருப் பொருள்களாக அறிமுகப்படுத்தியவை:
'' 
அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதூ உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூ ஊம்.... '' கும்.
அவர் கருத்துப்படி :- (1) அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
(2) 
உரைச்சால் பத்தினியை உயர்ந்தோரேத்துவர்.
(3) 
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற மூன்றுமே ஆகும்.எந்த இலக்கியமும் அது தோன்றிய காலத்தில் நியதிகளைக் கூறுவதோடு அமையாமல், பிற்காலத்திற்குத் தேவைப்படும் நீதிகளைப்போதிப்பதாகவும் இருக்கவேண்டும். சேர நாட்டு கவிஞர் தந்த சிலப்பதிகாரத்திற்கு இந்தச் சிறப்புண்டு. ஆகவேதான் காலத்தை வென்ற இலக்கியமாக - காப்பியமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சிலப்பதிகாரத்திக் கதை புனைந்துரை அன்று ; உண்மையில் நிகழ்ந்த வரலாறு. காப்பியத்தை அழகு செய்யவும், படிப்போர்க்கு சுவைதரவும் அங்குமிங்கும் குறைந்த அளவில் கற்பனைகளையும் வைத்துள்ளார்.
இளங்கோ கவிஞர்.இந்த காப்பியத்திலே இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட இலைமறை காயென மறைத்துவைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம் எனலாம். அப்படி மறைக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று கோவலனின் மதுரை பயணம் பற்றிய அந்தரங்கம்.
அதில் ''யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்த தன் விளைவாகக் கடலும்,காவிரியும் கலக்கும் இடத்திலே பல்லாண்டு தன்னோடு கலந்து வாழ்ந்த மாதவியைப் பிரிந்து மறுகணமே கண்ணகி இல்லத்தை நோக்கிச் செல்வது.'' கண்ணகியை பல்லாண்டுகளாக பார்க்கத் தவறி விட்டவனாதலால் அவளுடைய வாடிய மேனி அவனுக்கு வருத்தம் அளிக்கிறது. வரும் வழியிலேயே நன்கு ஆலோசித்து எதிர்காலம் பற்றித்தான் எடுத்த முடிவை எதிர் மறையில் கண்ணகிக்குஅறிவிக்கிறான்.அது ..

''
சலம் புணர் கொள்கைச் சலதியொ டாடிக் குலந்தரு வான்பொருள் குன்றந் தொலைந்த இலம்பாடு நாணுத் தரும் எனக்கு....'' - என்பதாகும்
கண்ணகியின் வாடிய மேனி அவனுக்கு வருத்ததத்தைத் தந்திருந்தும், அதனை வெளிப்படையாக கூறாது, மதுரை செல்லும் வழியில் எங்கும் கூறாது, மாதரி இல்லத்தில் மட்டும் கூறி,
'
சிறுமுதுக் குறைவிக்கும் சிறுமையும் செய்தேன்' என்று கூறி, கண்ணகியின் வருத்தத்தைத் துடைக்க முயல்கிறேன். இது ஆண்களுக்குகே இருக்கிற வீம்பு அல்லது தயக்கம் எனக்கூறலாம்.இதனை பூகாரில் கூறாது மதுரையில் கூறுவது கவிஞர் மன இயல்புகளையும் அறிந்துவைத்துள்ளார்.கண்ணகி தேவியின் வருத்தத்தை தீர்க்க- அம்மாபத்தினி மீண்டும் வாழ்வாங்கு வாழ வாய்பளிக்க,வாணிபம் செய்ய பொருளீட்டவும் தன் கையில் மூலதனம் இல்லை என்பதனைச் சொல்லாமல்
சொல்லுகின்றான் கோவலன். '' பாம்பறியும் பாம்பின் கால் '' என்பது போல், வணிக மகளானகண்ணகி தன் கணவன்கூறிய வாசகத்தின் உட்பொருள் அறிந்து, '' சிலம்புள, கொள்ளுங்கள் '' எனக்கூறினாள். தன் எண்ணம் பலித்ததறிந்த கோவலன்,

'' 
சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு உலந்த பொருளீட்டுத லுற்றேன் மலர்ந்த சீர் மாட மதுரை யகத்துச் சென்ற என்னோடு ங்கு ஏடலார் கோதாய் எழுக !''
என்று கூறி, கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரை புறப்படுகிறான். மாதவியைப் பிரிந்துபின் கண்ணகியின் இல்லத்தை நோக்கி வழி நடந்தபோது தன் எதிர்காலம் பற்றிக் கோவலன் எடுத்த முடிவு ? எப்படியேனும் சிறிது மூலதனத்தைத் தேடிக்கொண்டு, மீண்டும் தன் குலத்தொழிலான வாணிபத்தில் ஈடுபட்டுக் கண்ணகியுடன் கூடி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதாகும். அவனது முடிவுக்கு எதிர்பாராத வகையில் தன் காற்சிலம்புகளைத் தந்து மூலதனம் திரட்ட வாய்ப்பளித்து விட்டாள் கண்ணகி.
சிலம்பை விற்று மூலதனம் தேடி வாணிபம் செய்து பிழைக்கக் கோவலன் மதுரை செல்வது, அதனை '' பொருள் வயிற் பிரிவு '' என்கின்றன பண்டைய நூல்கள். பொருள் தேடும் பொருட்டுத் தலைவன் தன் தலைவியைப் பிரிந்து நாடு விட்டு நாடு சென்றால், அது '' பொருள்வயிற் பிரிவு ''என்ற இலக்கணத்தின் பாற்படும். இதற்கு பொருள் உரைத்த இளம்பூரணர், '' இதுவும் பொருள்வாயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துகிறது. இங்கு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிந்பிரிவும் கலத்திற் பிரிவும் என இருவகைப்படும். அவற்றுள் கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை என்றவாறு '' என்று விளக்கியுள்ளார். நச்சினார்க்கினியார் '' கலத்திற் பிரியும் காலத்தில் மட்டுமின்றி, காலிற் பிரியும் காலத்திலும் தலைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் தலைவனுக்கு இல்லை '' என்கிறார்.
இதனை

'' 
ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு தலைவியோடு கூடச் சேறலின்று என்றவாறு.''
''
தலைவியை உடன் கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங்களிலும், ஒழிந்த சான்றோர் செய்யுட்களுள்ளுங் காண்க. இதுவே சிரியர்க்குக் கருத்தாதல் வேண்டும். தலைவியோடு கூடச் சென்றாராகச் சான்றோர் புலனெறி வழக்கஞ் செய்யாமையான உணர்க ''
'' 
கலத்திற் பிரிவு ' என்பது, மரக்கலத்தின் வாயிலாகச் செல்லும் கடற்பயணமாகும். ' காலிற் பிரிவு ' என்பது நிலவழிச் செல்லும் கால்நடைப்பயணமாகும். கோவலன் சோழ நாட்டின் தலைநகரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிய நாட்டின் தலைநகருக்குச் சென்றதனால் அவனுடைய பிரிவு கலத்திற் பிரிவு காது ; காலிற் பிரிவேயாகும் என்கிறார். மதுரை நகரில் சிலம்பு விற்கும் பொருட்டாக மாதரி இல்லத்தில் கண்ணகியிடமிருந்து விடை பெற்றுச் செல்லும் கோவலன்,

''
வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கு ஈண்டு எழுக என எழுந்தாய் என்செய்தனை ''
என்று கண்ணகியிடம் கூறுங்கால்,பொருள் காரணமாகப் புகாரைவிட்டுப் பிரிந்தவன் தலைவியையும் உடன் அழைத்துச் சென்றது ' வழு ' என்பதை ஒப்புக்கொள்கிறான்.
'' 
நம்முடைய நகரிடத்து நின்றும் இந்நகரிடத்து வருவதற்கு ' எழுக ' வென்றேனாக, அது முறைமயன் என மாறாது என்னோடு ஒருப்பட் டெழுந்தாயே ! '' என்கிறான் கோவலன். தமிழினத்து வணிகர் மரபுப்படி பொருள் காரணமாகப் புகாரை விட்டுப் பிரிந்த கோவலன் தன்னுடன் கண்ணகியை அழைத்துச் சென்றிருக்க கூடாது. அது வணிக மரபுக்கு மாறுபட்ட இழுக்குடைய செயல். இதனை உணர்ந்தே '' உன்னை நான் அழைத்து வந்தது வழுவுடைய செயல் '' என்பதைக் கண்ணகியிடமே கூறுகிறான் கோவலன். சமணரான இளங்கோவடிகள் தமிழர்களின் பண்பாடு ,கலாச்சாரம், இலக்கணம் அறிந்துள்ளது நயமான இனிமையாகும்.
தமிழ் வணிகருடைய மரபுக்கு மாறாகக் கண்ணகியைக் கோவலன் தன்னுடன் அழைத்துச் செல்லக் காரணம் என்ன? இந்தக் காரணத்தை வெளிப்படையாகக் கூறாமல், இலைமறை கனியென மறைத்து வைத்துள்ளார் இளங்கோவடிகள். அவர் மறைத்த பொருளை உவமை நயமாக பார்ப்போம்.
கம்ப ராமாயணத்தில், தந்தையின் வாய்மையைக் காக்கும் பொருட்டு ராமன் கானகம் செல்கிறான். தொல்காப்பியர் கூறுகின்ற மூவகைப் பிரிவுகளுக்கும் ராமன் அயோத்தியை விட்டு பிரிந்ததற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் சீதையை உடன் அழைத்துச் செல்ல ராமன் விரும்பவில்லை. அவள் உடன் வர விரும்பியும் மரபுக்கு மாறுபட்ட செயல் என்று கூறாமல், '' பாலைவனம் உன் பாதத்தைச் சுடும் '' என்கிறான். அவளை அயோத்தியில் நிறுத்த முயல்கிறான். '' நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு '' என்று கூறி, பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியின்றி அவளை அழைத்துச் செல்கிறான். கோவலன் கண்ணகி கேளாத நிலையில் தன்னுடன் வருமாறு அழைத்துச் செல்கிறான்.
'' 
மரபுக்கு மாறாக உடன் வருமாறு உன்னை அழைத்தபோது நீயேனும் மரபின் மாண்பை நினையூட்டி உடன் வர மறுத்திருக்கலாம் ?'' என்று மாதரி இல்லத்தில் கோவலன் கண்ணகியிடம் சொல்லாமல் சொல்கிறான். தற்கு, ''வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய் என் செய்தனை '' என்று கோவலன் கூறியதே சான்று.
மதுரை புறப்பட நினைத்த கோவலன் திரும்பவும் சோழ நாட்டுக்கு வருவதில்லை என்ற முடிவு செய்து கொண்டு , கண்ணகியையும் உடன் அழைத்து செல்கிறான். திரும்பவும் புகார் நகருக்கு வரும் எண்ணம் அவனுக்கு இருந்திருந்தால் பொருள்வயிற் பிரியும் தலைவனுக்குரிய நெறிப்படி தான் மட்டுமே சென்றிருப்பான். கோவலன் மிக சிறந்த தன்மானம் கொண்டவன். மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் மானமுடையவன். மாதவியைப் பிரிந்து கண்ணகி இல்லம் புகுந்த கோவலன், அவள் வாழ்ந்த ஏழுநிலை மாடமுடைய மாளிகையில், வேறெந்தப் பகுதிக்கும் செல்லாமல்,
'' 
பாடமை சேக்கைப் பள்ளியுள் புகுந்தான் ''. பல்லாண்டு கண்ணகியைப் பிரிந்து கோவலன் மீண்டும் வந்ததும் நேரே பள்ளி அறை புக வேண்டும். இங்குதான் ளங்கோ பாத்திரப் படைப்பின் பண்பை இலக்கிய நயமாக விலக்குகிறார். பள்ளியறை கணவன் - மனைவி இருவம் மட்டும் செல்லக்கூடிய அந்தரங்க அறை. வேறு யாரும் தம்மைப் பார்த்துவிடக்கூடாது என்ற நினைப்பில், எண்ணத்தில் பள்ளியறை புகுகிறான். காரணம் , கண்ணகி வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போதே மறுநாள் காலை புகாரை விட்டு வெளியேற முடிவு செய்துக்கொண்டான். கையால், புகாரில் தான் தங்கியிருக்கும் இரவு பிறர் கண்ணில் பாடமல் மறைந்திருக்க விரும்பினான்.
மறுநாள் காலைக் கதிரவன் அடிவானத்தில் தன் சுடர்களை வீசி எழுவதற்கு முன்பே - இருளிலேயே தான் பிறந்த பதிவிட்டு பெயர்கிறான். இதுவும் அவனது தன்மானத்திற்கு சான்றாகும். புகாருக்கு வெளியே கவுந்தியடிகளைச் சந்தித்தபோது,

'' 
உருவும் குலனும் உயர்பே ரோழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் ! என்னே உறுக ணாளரிற் கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறு ....'' என்று கேட்டபோது, ' மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன் ' என்கிறான் கோவலன்.
அபோதும் கூட ' பொருள் தேடும் பொருட்டு மதுரை மூதூர் செல்கின்றேன் ' என்கிறான். அந்த சமயத்தில் கூட , ' என் மனைவியின் காற்சிலம்பை விற்றுப் பொருள் தேடப் போகிறேன் 'என்று சொல்லவில்லை. அப்படிக் கூற மானமுள்ள அவனது நெஞ்சு மறுத்திருக்க வேண்டும். மதுரையில் , கோவலனைக் காட்டிப் பொற்கொல்லன் கூற, அவனது கூற்றை ஒரு வார்த்தை கூட கோவலன் கூறவில்லை. ம் ;, தன்னைக் காட்டி. '' இவனே கள்வன் '' என்று பொற்கொல்லன் கூறக் கேடோதே மானமுடைய கோவலன் மாண்டுபோய் விட்டான். கையால், கல்லாக் களிமகனான காவலன் ஒருவன் தந்து கையிலிருந்த வாளால் வெட்டியபோது, '' கோவலன் கொலையுண்டான் '' என்று கூறாமல்,

''
கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது '' என்கிறார் இளங்கோவடிகள். '' விலங்கூடு அறுத்தது '' என்னும் சொல் ஆ ழ்ந்த பொருளுடையது.
இங்கும் இளங்கோவடிகளின் இலக்கிய உவமை நயத்தினைக் காணலாம். தான் கள்வன் என்று கேட்டப்போதே கோவலன் மாண்டு போய்விட்டான் என்பதனை நினைவூட்டும் வகையில் காவலன் வீசிய ஒளி பொருந்திய வாளானது கோவலன் உடலைக் குறுக்காகத் துண்டாடியது என்கிறார் ளங்கோ. ம் ; உயிர் முன்பே போய்விட்டதால் ,வெறும் உடலை வெட்டினான் கொலைஞன்.
' 
கள்வன் ' என்னும் பழிசொல்லை, இழிசொல்லை கேட்டபோதே உயிர் நீத்தான். மொழி நுட்பம் -அடுக்கு மொழி ற்றல் : கணவனை இ ழந்த பாண்டிவேந்தன் அரண்மனை வாயிலை அடைந்து வாயிற் காவலனுக்குக் காட்சி அளிக்கிறாள். '' வாயிலோயே , வாயிலோயே !'' என்று வாயிற்காவனை விளித்து,
வாயிலோயே ; வாயிலோயே ! அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே ! இணையரிச் சிலம்பொன் ஏந்திய கையன் கணவனை இழந்தாள் கடையகத்தான் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே ! [ என ]
கண்ணகியைக் கண்ட வாயிற்காவலன் நடுநடுங்கிப்போனான். தென்னவன் செழியவன் அரண்மனை வாயிலியே, அதற்கு முன் கண்ணகியின் கோலத்தில் வேறு யாரும் வந்து வாயிற் காவலனை கண்டதில்லை. அதனால் கண்ணகியின் வரவு கண்டு அஞ்சி அவளது வரவை அறிவிக்க உள்ளே ஓடுகிறான்.
வாழி ! எம் கொற்கை வேந்தே வாழி ! தென்னம் பொருப்பின் தலைவ வாழி ! செழிய வாழி ! தென்ன வாழி! பழியொடு படராப் பஞ்சவ வாழி அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடமேறிய மடக்கொடி வெற்றிவேற் அடக்கைக் கொற்றவை யல்லன்; அறுவர்க் கிளைய நங்கை, இறைவனை டல் கண்டு அருளிய அணங்கு, சூருடைக் கானகம் உகந்த காளி ; தாருகன் பேருரம் கிழிந்த பெண்ணும் அல்லன்; பொற்றோழில் சிலம்ம்பென் ஏந்திய கையன் கணவனை இழந்தாள் கடையகத்தாளே !
மன்னனைக் கண்டதும் ' வாழி ' என ஒரு முறை வாழ்த்துகிறான். ' என் கொற்கை வேந்தே, வாழி
'
என்று திரும்பவும் ஒரு முறை வாழ்த்துகிறான். அதாவது, வாயிற்காவலனின் வாய் ' வாழி 'என்று கூறிய ஒவ்வொரு சமயத்திலும், அவன் தலை வணங்கிக் கொண்டே இருந்ததாம் ! ஆ ம் ; பாண்டியன் நெடுஞ்செழியனை வாயிற் காவலன் இனிமேல் வாழ்த்தப் போவதில்லை. அவன் தலையும் வணங்கப்போவதில்லை. அதனால், ஆ று முறை வாழ்த்தியும் வணங்கியும் அவலச்சுவையை வெளிப்படுத்துகிறான். இதுதான் இறுதியான வாழ்த்தும் வணக்கமும் என்று இளங்கோவடிகள் சொல்லமல் சொல்கிறார்.
கோவலன் கள்வனல்ல என்பதனைக் கண்ணகியால் அறிந்த பாண்டிய வேந்தன்,
' 
பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்டேன் ' இது அவனது தீர்ப்பின் முதல் வாசகம். இதிலே மறைந்திருப்பது , ' அமைச்சர்களின் சொல் கேட்கத் தவறினேன் ' என்பதாகும். ம் ; கேட்க வேண்டிய அமைச்சர்களின் சொல் கேட்கத தவறியது ஒரு குற்றம் ; கேட்கத் தகாத பொற்கொல்லன் சொல் கேட்டது மற்றொரு குற்றம். ஒன்றை வெளிப்படையாக சொல்கிறான். மற்றொன்றை அதனுள்ளேயே மறைந்து கிடக்கிறது. மன்னன் சொன்ன மறுவாசகம், '' யானோ அரசன் ?'' என்பதாகும். இதிலே . ' யான் அரசல்லன் ' என்ற பொருளும் மறைந்து கிடக்கிறது. அடுத்து, 'யானே கள்வன்' என்றான். 'யானே ' என்பதிலுள்ள பொருள் கோவலன் கள்வனல்லன் என்னும் பொருளைத் தருகிறது. இவ்வளவு பொருள் புதைந்த, அருள் நிறைந்த, அறஞ் செறிந்த தீர்ப்பை , தமிழ் மொழியிலேதான் கூறமுடியும்.
தமிழ் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் மிகச் சிறந்த நாடகக் காப்பியமாகும்.
' 
நாடகம் ' என்ற சொல்லுக்கு நாடு முழுவதையும் -அதாவது நாட்டிலுள்ளஅனைத்தையும் தன்னகத்தே காட்டுவது என்று பொருளாகிறது. சிலப்பதிகாரம் நாடு முழுவதையும் தன்னத்தே காட்டும் தன்மை உடையதாகும். சேர-சோழ- பாண்டிய மண்டலங்களைக் கொண்டதாக காண்கிறோம். அந்தணன், அரசர்,வணிகர், வேளாளர்ள கிய நால்வகையாளலிருந்தும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்சிரியர்.
இலக்கண முறைப்படி குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்,பாலை என ஐவகை நிலங்களை பிரித்துக் காட்டியுள்ளார். ஐவகை நிலங்களை யன்றி, ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தனித்தனித் தெய்வங்களை அந்தந்த நிலமக்கள் வழிபடுவதையும் தெளிவாக சாட்சிப்படுத்தியுள்ளார். மருதத்தில் இந்திர விழா , பாலையில் கொற்றவை வழிபாடு, குறிஞ்சியில் முருகன் வழிபாடு, முல்லையில் திருமால் வழிபாடு, நெய்தலுக்குரிய வருணன் வழிபாடு என்று வகைப்படுத்தி,
'
கானல் வரி'ப்பாட்டின் றுதியில், ''மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குவதும்'' என்று கடல் தெய்வத்தின் வழிபடுதலைக் காண்கிறோம்.
பாத்திரங்களில் [மக்களில்] பன்னிரண்டு வயதுடைய கண்ணகி முதல் முதியோளான இடைக்குல மாதரி வரையிலும் பலவேறு பருவத்தினரையும் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். இப்படி, நாடு முழுவதையும் தன்னகத்தே காட்டும் தலைசிறந்த நாடகக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திலே குறுநடை பயிலும் குழந்தை நடமாடக் காண்கிறோம். இந்த காப்பியத்திலே இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட இலைமறை காயென மறைத்து வைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம் எனலாம்.
சிலப்பதிகாரம் பயில்வோர், தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் போதித்த வாழ்க்கை நெறியோடு சிலப்பதிகாரப்பாத்திரங்களைப் பொருத்தி ராய்வார்களாயின்,எத்தனை எத்தனையோ இலக்கிய இன்பங்களை , உவமை நயங்களைஅனுபவிப்பர். '' நவில் தொறும் நூல் நயம்போல் '' என்று வள்ளுவர் கூறினாரே, அதற்குச் சான்றாக அமைந்தபெருநூல், காப்பியம் மகாகவிஇளங்கோ தந்த சிலப்பதிகாரம்.

அ.செ. முருகானந்தன் எழுதிய
'புகையில் தெரிந்த முகம்' எனும் நாவிலிருந்து (1950)


அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாளிரவு. செகசோதியான நிலவு காயும் காலம். யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற பிரதேசத்தை பகல் வேளையில் தகிக்கும் வெய்யில் அக்கினிக் குண்டமாகவே மாற்றிவிடும். வளர்பிறை காலத்து இரவுகளிலோ நிலைமை எதிர்மாறாகவிருக்கும். வெண்மனற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமிர்த கிரணங்களை வாரி இறைத்து அதை ஒரே குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப் போல பரந்து கிடக்கும் ஒரே மணல்வெளி. அந்த வெளியை இரண்டாகப் பிளந்துசெல்லும் தெரு வீதி வழியே நிலாக் காலத்தில் மாட்டுவண்டி பிரயாணம் செண்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப் பொருத்தம் என்று சொல்ல வேண்டும், வருஷம் முந்நூற்றி அனுபத்தைந்து நாளும், மண்கிண்டி, தண்­ர் இறைத்து, களைபிடுங்கி அலுத்துப் போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும் ஆறுதலுக்கும் ஏற்ற ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகிலும் பூமியைத் தோய்க்கும் பால் போன்ற வெண்ணிலவு. வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவைகளைக் கடந்து போய்க் கோயிலை அமைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் வெண்மணல் திட்டியும் பால் நிலவும் தென்றற காற்றும்தான். கூட, கோயிலிலிருந்து நாதசுரம் இன்னிசையைப் பிழிந்து மிதந்துவரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். மனித உள்ளத்தின் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்?


அ. மரியதாசன் எழுதிய
'பனைநாடு அல்லது பிளந்த உலகம்'
என்னும் நூலிலிருந்து (1953)

காலை ஆகிறது. வானிடை முகில் ஒன்றும் இல்லை. செஞ்ஞாயிறு குண கடலினின்று பரிதியாய்க் கிளம்புகின்றது. பெவளத்தில் அங்கொன்று இங்கொன்றாய் மிதந்து செல்வன யாவை?

அஃதோர் ஆவின் பிணம்! இஃதோர் ஆட்டின் உடல்! முகம் வானம் பார்த்தாற்போல் செல்வது ஓர் அரிவையின் பிரேதம்! குப்புற மிதந்து துவள்வது ஓர் ஆடவனின் உயிர் நீங்கிய யாக்கை!

மிதக்கின்ற பனை, தென்னைகளுக்கு ஒரு கணக்கே இல்லை. ஆனாற் சில பனைகளின் முடிகளே தென்படுகின்றன. இவை மிக உயர்ந்தனவும் இன்னும் நிலம் பெயராதனவுமாய் இருத்தல் கூடும்.


வே. தில்லைநாதன் எழுதிய
'அனிச்சமரின் காதல்' எனும் நாவலிலிருந்து (1953)

அளிச்சம்....அன்றையத் தினமிருந்த அழகை எளிதில் விவரிக்க முடீயாததாயிருந்தது. நீண்ட வடம்போல் பின்னித் தொடை வரைக்குந் தூங்கிய கூந்தலும் சிறந்த நெற்றியும் அகண்ட வாள்போல் கண்களும் மெத்தென்னும் மாந்தளிர் மேனியும் முத்துப்போல் பற்களும் அன்ன நடையும் காதில் கண்ணைக் கூசும்படி ஜொலிக்கும் வைரத் தோடும் மார்பில் முத்து வடமும் உடையவளாய் வந்து சபையின் கண் இருந்தனள். அத் தருணம் வந்த மகான்களில் அயல் கிராமத்தில் நீதவானாயிருக்கும் ஒரு வாலிபரும் வந்தார். அவர் ஆடவர்களில் மன்மதன் போல் பார்க்கிறவர்கட்கெல்லாம் கண்ணைத் தைக்கும்படியாய் இருந்தார். பொன்னிற மேனியும் கருமையான தலைமயிரும் அகண்ட நெற்றியும் பார்க்கிறவர்களை ஊடுருவிச் செல்லத்தக்க கண்களும் சிறந்த அலங்காரமான முகமுடையவராய் அனிச்சமலருக்கு அருகாமையில் அமர்ந்திருந்தார்.


பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய

'வாழ்க்கையின் வினோதங்கள்'
என்னும் நாவலிலிருந்து (1954)


ஒரு நாள் கொம்பனித் தெருவிலுள்ள வறிய வீடொன்றிற்கு நான் போனேன்... அத் தெருவுக்கு அன்றுதான் முதன் முறை போனோம். அங்கு போனதும் அத் தெரு இருந்த நிலையைக் கண்டு விறைத்துப் போனேன. அத் தெருவைப் பற்றிக் குற்றமாய் கூற எனக்கு விருப்பமில்லை. அங்குள்ள வீடுகள் மிகப்பழுதான நிலையில் இருந்தன. சில மாதங்களில் அவற்றை நகரசபையார் இடித்துவிடத் தீர்மானித்திருந்தனர். அங்கு காற்றோட்டமில்லை. சூரிய வெளிச்சத்தைத் கனவிலும் காணமுடியாது. அத் தெரு இருந்த பகுதி கொழும்புக் கோட்டைக்கு அணித்தாயிருந்த போதிலும் கொழும்பு கோட்டைக்கு அணித்தாயிருந்த போதிலும் கொழும்பு நகரவாசிகள் அதைச் சிறிதேனும் அறியார். அத் -ருவுக்குத் தார் போட்டிருந்ததோ என்னவோ எனக்கு நினைப்பில்லை. ஆனால் அங்கு வைக்கோற் துண்டுகளும் பலவகையான அழுக்குப் பொருள்களும் நிறைந்து நிலத்தை மறைத்தன. தெருவே வாழிடமாகக் கொண்ட வறிய சிறு குழந்தைகள் அங்குள்ள சேற்றிலே உருண்டு விளையாடித் திரிந்தனர். வலது பக்கமும் இடது பக்கமும் வீடுகள் நிறைந்திருந்தன. அவை யாவும் உயர்ந்து அழுக்குப் படிந்து கிடந்தன. அவ் வீடுகளின் சாளரங்கள் திரைச் சீலைகளை ஒருபோதும் கண்டறியா. திரைச் சீலைகளுக்குப் பதிலாக அவை ஒவ்வொன்றிலும் கிழிந்த கந்தைகள் தொங்கின. அக் கந்தைகள் யாவும் எப்போது அங்கு காற்று ஒரு சிறிதாவது வந்து தம்மைக் காய வைக்குமோ என்று பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தன.


கே.வி.எஸ். வாஸ் எழுதிய
'குத்தாளப் பிரேமா'விலிருந்து (1951)

இந்த விளம்பர யுகத்தில் கம்பனும் காளிதாசனும், மறு ஜென்மமெடுத்து வந்தால்கூட ஓரளவு விளம்பர மில்லாவிட்டடால் உலகம் அவர்களை மகாகவிகளென்று அங்கீகரிக்காதென்று ரமணி அடிக்கடி சொல்லுவான். "தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன்! இன்றும் நம்மிடையில் எவ்வளவு மகாகவிகள் இருக்கிறார்கள். எவ்வளவு அற்புதமான கவிதா மாலைகளைப் புனைந்து தமிழ் மொழியை வளம்பெறச் செய்கிறார்கள்! அவர்களை நீங்களும் நானும் பெரிய கவிஞர்களென்று சொல்லிவிட்டால் உலகம் ஒப்புக்கொண்டுவிடுமா? அவர்கள் செத்துச் சாம்பலான பிறகு ஏதோ ஓரிரண்டு பத்திரிகைகள் அவர்களது பழைய கவிதைகளை ரசித்துவிட்டுப் புளுகுகின்றன. உடனே ஓரேயடியாக மற்றப் பத்திரிகைகளும் இந்திரன் சந்திரன் என்று வானளாவிப் புகழ்கின்றன. பிறகு மாண்ட கவிகளுக்கு ஞாபகச் சின்னமாக மண்டபம் கட்டுவோமா, ஸ்தூபி நிறுத்துவோமா என்று கூட்டம் போட்டுக் கூடி யோசிக்கிறார்கள். இந்த அளவு அந்தக் கவிஞன் உயிருடன் இருக்கும் பொழுதே ஏற்படுவது தானே? வறுமையில் வயிற்றைச் சுருக்கிக் குடிக்கக் கூழுமில்லாமல் செத்து மடிகிறான் தற்காலக் கவிஞன். அவனைப் ஆதரிக்க ஆளில்லை. இதை எதற்குச் சொல்லுகிறேன்றால் இன்று கன்னா பின்னா என்று ஏதோ எழுதித் தள்ளும் அரை குறைப் பேர்வழிகளைக் கூட விளம்பரம் என்ற மகா சக்தி மேதையாக்கி விடுகிறது. விளம்பரம் தான் இன்றைய வர்த்தகத்தின் உயிர் நாட...." என்று ரமணி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்வான்.


எம்.ஏ.அப்பாஸ் எழுதிய
'இவனைப் பார்' நாவலிலிருந்து (1953)

நாளை திருமணம்!- அப்படி நினைத்துக் கொண்டு தான் வந்தார் சலீம். பூட்டிக் கிடந்த கதவைத் தட்டினார். ஆம், வைராக்கிய மென்னும் பூட்டால் பூட்டப்பட்டிருந்த என் இதயக் கதவிலும் தான் அந்தத் தட்டு மோதியது! குதித்தோடிப் போய்க் கதவைத் திறக்கத் துடித்தன காதலும் கையும்! சிறிது நேரம் சிரமப் பட்டு, உணர்ச்சிகளையெல்லாம் அடக்கிக் கொண்டு மெதுவாகச்சென்று கதவைத் திறந்து விட்டு விர்ரென்று ஓடி வந்து கட்டிலில் விழுந்து விம்மி விம்மி அழுதேன். விஷயம் விளங்காமல் விழித்தார். என்னை அள்ளியெடுத்தார். அன்பொழுகப் பேசினார். அரும்பாடுபட்டு என் கரும்பு மனத்தை இரும்பாக நான் மாற்றிக் கொண்டதை அவர் எப்படி அறிவார்? புழுவாகத் துடித்தார். கேள்விகளை அடுக்கினார் முடுக்கினார். அவருடைய நிலை பார்ப்பதற்கே பரிதமாக இருந்தது. அப்படியே கட்டித் தழுவி எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டு மென்று மனம் துடித்தது. கண்களைத் திறந்தேன். ஆ! அந்தத் துர்ப்பாக்கியத் தாயின் சோகச் சித்திரம் தோன்றி என்னை எச்சரித்தது. அன்பும் தியாகமும் காதலும் கடமையும் குமுறித் கொந்தளிக்கும் உள்ளத்தோடு போராடிக் கொண்டே, போட்டு உடைத்தேன் அந்த அணுகுண்டை!

"தேவன்-யாழ்ப்பாணம்" எழுதிய
"கேட்டதும் நடந்ததும்" நாவலிலிருந்து (1956)

இப்படி எத்தனையோ நினைவுகள். அழியாத நல் இன்பமூட்டும் நினைவுகள். சோலைவாய் வாழ்வை ஆக்கியவை அவை தாம். நிறைவை உண்டு பண்ணியதும் அவை தாம். ஆனால் துன்பந்தந்து துடிக்கச் செய்வதும் அவை தான். கொல்லுவதும் அதே நினைவுகள். செழிக்கச் செய்வதும் அதே நினைவுகள். இத்தனையும் என்னைப் புது மனிதனாக்கி விட்டன. வகுப்பில் மட்டுமென்ன, பார்த்த இடமெல்லாம் அழகைக் கண்டேன். இன்பத்தைக் கண்டேன். ஒரு கவிஞன், அழகு எங்கெல்லாமிருக்கிறதோ அங்கெல்லாம் தேடித் திரிந்து கண்டு பிடித்து ஆராதிக்கிறேன், அனுபவிக்கிறேன் என்று பாடியிருக்கிறான். ஆனால் எனக்குத் தேடித் திரிய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. பார்க்குமிடங்களெல்லாம் 'நந்தலாலா, உன்றன் பச்சை நிறந்தோன்றுதையே நந்தலாலா' தான்.


ஹமீதா பானு எழுதிய
"சதியில் சிக்கிய சலீமா"விலிருந்து

"சரி அம்மா! நான் படுத்துக் கொள்ளுகிறேன். நீ போய்த் தூங்கு" என்று தாயாரை அனுப்பி விட்டுச் சலீமா படுத்துக் கொண்டாள். தான் கண்ட கனவு நனவாகுமா என்பதிலேயே கவலை கொண்டு கருத்தைச் செலுத்திக் கொண்டு புரண்டு புரண்டு கிடந்தாள்.

காகம் கரைந்தது, கருமை வெளுத்தது. கண் விழித்துக் கனவேகத்தில் காலைக் கடன்களை முடித்து விட்டாள் சலீமா. வயிற்றிலே வளர்ந்து வரும் சிசுவின் வரப்பிரசாதமான குமட்டல், வாந்தி, மயக்கம் இவைகளும் கூடவே கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தன. அவைகளையெல்லாம் அவ்வப்பொழுது சந்தர்ப்பத்திற் கேற்ப மழுப்பி மறைத்து மந்திர ஜாம் செய்து கொண்டாள். அவளது வெள்ளையுள்ளத்தைப் போன்ற வெண்ணிற ஒளி பரப்பி சூரியனும் வெளிக்கிளம்பி வந்து கொண்டிருந்தான்.


காயல் தாஹ’ர் எழுதிய
"சிந்தித்துப் பார்" நூலிலிருந்து (1954)

சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் 'டங்....டங்' கென்று ஆறுமுறை அடித்தது. கதிரவனின் பொற் கதிர்கள் கீழ் வானத்திலே தெரிந்து. பின் சற்று நேரத்திலே அக் கதிர்கள் பச்சைக் கம்பளம்போல் படர்ந்திருந்த பசும் புல்லின் மேட்பட்டு, அதில் ஒட்டிக்கொண்டிருந்த பனித்துளிகளை வெண்முத்துக்களாக்கின. ஆதவன் வரவைக்கண்டு 'தன் பகைவன் வந்து விட்டான். இனி நமக்கு மதிப்பில்லை' என்றெண்ணிய இருள் மெள்ள மறைந்தோடியது. காதலனைக் கண்ட அல்லிமலர் ஆனந்தத்தால் தன்னிதழ்களை விரித்தது. மற்ற மலர்களம் தங்கள் இதழ்களை விரித்தது, வண்டுகளை வா வா என்றழைப்பது போலிருந்தது. பறவை இனங்கள் இனிமையாகப் பாடிக்கொண்டு இறைவனைத் தொழுதன.

வியாசக விதரணன் எஸ்.முத்தையா எழுதிய
'நாகரிக நிர்மலா அல்லது மலைக்குறத்தி மகள்' நூலிலிருந்து (1955)

அவள் மனமே பரவசமடைந்து "என்ன ஆனந்தம்! என்ன அழகு ! காதல் என்பதும் இதுதானா? காதல் லீலை என்பதும் இதுதானா?" என்ற சொற்கள் அவளை அறியாமலே வெளியாகின்றது. பக்கத்தில் படுத்திருந்த நூர்ஜா திடுக்கிட்டெழுந்து உட்காந்தாள். நிர்மலா, நிர்மலா என்று கூப்பிட்டும் பார்த்தாள். சத்தமில்லை, அதே சமயம் நிர்மலாவின் வாயிலிருந்து சந்தனக்குமார் சொன்ன:

"யாமினி அரா மின்னாக் கலவி, கற்றவர் ஞைஞை
மனன மாறி தராக் கிரகி, மறுதலைப் பாவை வாழ் பாழ்"

என்றது வெளியானது. லைலாவும் அதை இரண்டு மூன்று தரம் பாடமாக்கிக்கொண்டாள்.

மு.வே.பெ.சாமி எழுதிய
"யார் கொலைகாரன்?" நாவலிலிருந்து (1954)

ஏழை என்றால் இன்பமாளிகைக்குப் பணக்காரன் ஏறிச் செல்லும் ஏணி என்றுதானே பொருள். அந்த ஏழைக்குப் பசி என்றால் அவர்களுக்குப் பன்னீர் இறைத்ததைப்போல, அவன் பட்டினி என்றால் பரவச மடைவார்கள். மரணம் என்றால் மனிதனுக்கு நியமிக்கப்பட்ட நித்திய ஜ“வயாத்திரைஎன நீட்டோலை வாசிப்பார்கள். சிந்தும் கண்­ர் அவர்களின் தேள் கொட்டிய கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிக்கும். பாட்டாளி என்றால் காலடியில் வீழ்ந்துறங்கும் நாய்கள் என வரட்டு வேதாந்தம் பேசுவார்கள்.

இ.தொ ETNV003.MTF



எம்.பீ.எம். முகம்மதுக் காசீம் எழுதிய
'கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு' நூலிலிருந்து (1955)

குனிந்த முதுகு நிமிராமல் மூட்டை சுமக்கும் பாரத இந்தியா ஈன்ற பாரத இந்தியா ஈன்ற பாக்கியங்களைப் பார் பார்! அவர்களல்லவா இலங்கை மாதாவாகிய என்னைப் பல வகையாலும் சிறப்பித்துச் சீர்படுத்திச் சிலோன் என்று ஒரு நாமத்தடுன் உலகமெல்லாம் புகழடையச் செய்தார்கள். கீழ்த்திசையின் முத்தென்று பேர்வந்தது எனக்கு, இந்திய மக்கள் செய்த அழியாத அலங்காரச் சேவையாலென்றால் அது மிகையாகாது மகனே! எனக்கு எத்தனை பெயர் கவனி. பவளத்தீவு, நாகதீபம், இலங்காபுரி, சேரந்தீவு, சீலோன் இப்படிப் பல பவிசுப் பெயர்கள் வரக் காரணம் இந்தியன் இயற்றிய சிங்காரச் சேவையின் சிறப்பு. அவர்களை இந் நாட்டை விட்டு நீங்களகற்றினால் நாலேமாதத்தில் நானும் என்னுடைய நாசூக்கான அழகும் நலிந்து போய்விடும்; சந்தேகமில்லை.


வி.லோகநாதன் எழுதிய
'பிரேமாஞ்சலி'யிலிலிருந்து (1954)

என்னைப் பொறுத்த வரையில் காதலை வாழ்வுக்கு அடுத்தபடியாகவே வைக்க விரும்புகிறேன். யோசித்துப் பார்த்தால் காதல் வாழ்க்கையாகாது. வாழ்க்கை இல்லாவிட்டால் காதல் ஏது? ஆனால், காதலுக்கோ வாழ்வு முழுவதையும் தின்னும் சக்தி உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான் காதலைப் பிரதானமாக்கிக் கொள்ளக் கூடாதென்று கூறுகிறேன். வாழ்க்கையைப் பரிமளிக்கக் காதல் அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. காதல் மிகமிக அவசியம்தான். ஆனால், அது வாழ்வில்லை, ஓர் அம்சமாகவே இருக்க வேண்டும். வாழ்வோ பரந்தது. காதலுக்காக இந்த வாழ்வையே பலியிடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம் மாத்திரமன்று; அப்படிப் பலியிடுவது அந்தக் கடவுளுக்குக் கூட அடுக்காதென்றே நினைக்கிறேன். காதலுக்காக வாழ்க்கையை - மகா சிரேஷ்டமான உயிரையே - பலியிடும் காதலர்களைக் காவியங்க• புகழ்ந்துகொண்டேயிருக்கட்டும். அந்தக் காவியக் கற்பனைகளைப் படித்துவிட்டு நாமும் காதலுக்காக வாழ்கையைப் பலியிட வேண்டாம்.


வரதர் எழுதிய
"வாழ்க நீ சங்கிலி மன்ன!" நூலிலிருந்து (1957)

போர்! தினவெடுத்த தோள்களைத் தட்டித் திரண்டெழுந்தனர் தமிழ் வீரர். போர்ப் பறை ஒலித்தது. வீரர்கள் ஆரவாரம் அதைவிடப் பெரிதாய் முழங்கிற்று. வில்லும், வேலும், வாளும், ஈட்டியும் தாங்கிய வீரர் படை அணியணியாகச் சென்று பறங்கியர் பாசறையை நெருங்கிற்று, பறங்கியர் படையும் தயாராக எதிர் வந்தது. அவர்கள் கையிலே துப்பாக்கிகள். ஒருவன் வெடிக்கச் செய்யும் துப்பாக்கிகள், தமிழர் படையிலிருந்து அம்புகளும் நஞ்சூட்டிய ஈட்டிகளும் கவண் கற்களும் சக்கரங்களும் பறந்து பறந்து பறங்கியரைத் தாக்கி வீழ்த்தின. பறங்கியர் துப்பாக்கிச் சூடுகளும் தமிழ் வீரர்களைத் துளைத்தன.


வ.அ. இராசரத்தினம் எழுதிய
'கொழு கொம்பு' நாவலிலிருந்து (1959)

நீண்ட இரவின் மௌனம் அவனுக்கு இன்பமாகவே இருந்தது. மலைநாட்டிலே கொட்டும் மழையும் பனியையும் அவனால் அனுபவிக்க முடிந்தது. வெள்ளிக்கம்பிகளாய் ஒழுகும் மலையருவிகளின் இன்பத்தை அவனால் நுகர முடிந்தது. மாலை மதியத்தின் குளுமையையும் வேனிற் காலத்து வனப்பையும் அவனால் உணர முடிந்தது.

தனிமையின் கொடுமையையும் அதன் பயங்கரத்தையும் மறக்கச் செய்து தன்னை நிலத்திலே நன்றாக வேரூன்றி நிலைக்கச் செய்துவிட்ட புருஷன் என்ற கொம்பிலே அந்தக் கொடியும் செழிப்பாக படர்ந்தது. நாளுக்கொரு முகையும் தளிரும்விட்டு ஆனந்தமாகப் படர்ந்து அக்கொடி தென்றலில் ஆடிற்று. வேனிலில் விகசித்தது. நிலவிலே குளிர்ந்து ஓளிர்ந்தது. காலம் வரும்போது அது பூக்கும், காய்க்கும். தன் இனத்தைப் பெருக்கியே தீர்க்கும்.


தா. சண்முகநாதன் எழுதிய
'கோமதியின் கணவன்' என்ற நாவலிலிருந்து (1959)

இரவில் தாயின் ஒருபக்கத்தில் சோமுவும் மறுபக்கத்தில் சோமுவின் அக்காவும் படுத்துக்கொள்வார்கள். தன் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ளும்படி சோமுவின் அக்கா சொல்லுவார். என் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள் என்று சோமு கூறுவான். சோமுவின் தாயார் இருதலைக் கொள்ளி எறும்பு போலாவார். மகளைச் சமாதானம் செய்துவிட்டு இவன் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்வார். மகளும் அடம் பிடித்தால் இருவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையில் மேலே பார்த்தபடி படுத்துக்கொள்வார்.


எஸ்.பொன்னுத்துரை எழுதிய
'தீ' யிலிலிருந்து (1961)

இனியவையாகத் தோன்றியவையெல்லாம் துன்பச் சாயலில் கருகுகின்றன. மங்கையின் மிருதுவான பட்டுக் கன்னங்களை நினைவுபடுத்திய அந்தி வானம், கூரிய வாளினால் பிளந்தெளியப்பட்ட மூளிமுண்டங்களிலிருந்து பாயும் இரத்தத்தை ஞாபகப்படுத்துகின்றது. வேல்விழி மாதரினி சிங்காரப் போதையூட்டும் நயன சிந்துக்களை மனத்தில் நிறுத்திய விண்மீன்கள், பிணத்தை முழுசாக ஜ“ரணித்த சிதையிலிருந்து வெடித்துக் கிளம்பும் தீப்பொறிகளை ஞாபகப்படுத்துகின்றது. புன்னகை புரள, லளித, அலை நெளிய, தேனூரும் குமரி இதழ்களை நினைவுறுத்தும் குங்குமச் சிமிழி, போர்க்களம் விட்டோடிய கோழையின் முதுகில் ஏற்பட்ட ரண காயத்தின் காயலைக் காட்டுகிறது. வளைந்த செப்பு நாணயத்தைப் போன்ற இமைகளின் உட்பக்கம் குடைந்திருக்கும் சின்னஞ்சிறு குகைக்குள் பயப் பிராந்தியுடன் விழிகள் கடியிருக்க மறுக்கின்றன. சொகுஸான பஞ்சு மெத்தை. நான் படுத்துக்கொண்டதும் தீப்பற்றி எரிகிறது. உணர்ச்சிகள் மரத்துப் போகின்றன. சித்தம் குலைந்த பித்த நிலையில்-லில்லி! (என் லில்லி!); அது என் அழைப்பல்ல. என்னுள்ளிருந்து, என்னில் வேறாக, ஒரு சக்தி அழைப்பது உன் காதில் விழுகிறதா? உன் செவிகள் வானொலிப் பெட்டிகளா? என் தொண்டைக்குள் அஞ்சல் நிலையம் இருக்கிறதா?


இளங்கீரன் எழுதிய
"நீதியே நீ கேள்" நாவலிலிருந்து (1959)

வயிற்றுக்காக - கூலிக்காக - ஏழைகள் பணக்காரர்களிடம் வேலை செய்கிறார்கள். ஆனால், அவர்கள் உயிரை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. மற்றப் பயனெல்லாம் பணக்காரர்களுக்கு- சொத்துக்குரியவர்களுக்குச் சேர்கிறது: அதை அவர்கள் "லாவம்" வருமானம் என்ற பெயரில் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறார்கள். இந்தச் சுரண்டல் முறையிலேயே முழுக்க முழுக்க ஊறிப்போன முதலாளி பரமசிவம் பிள்ளையும் தன் கடைச் சிப்பந்திகளின் விஷயத்தில் இப்படித்தான் நடந்துகொண்டாரென்றால் வல்லி புரத்தை மட்டும் விட்டு வைப்பாரா? வில்லிபுரமும் அவர் குடும்பமும் உயிரை மட்டும் சுமந்துகொண்டு திரிவதற்குத் தேவையான தொண்ணூறு ரூபாவைச் சம்பளமாகக் கொடுத்துவிட்டு, வல்லிபுரத்தின் ஒரே சொத்தான உழைப்புச் சத்தியை நல்லமுறையில் தனக்குப் பயன்படுத்திக்கொண்டார். அதனால், வல்லிபுரத்துக்குப் பிள்ளை குட்டிகள் பெருகியதுபோல வருமானம் பெருகவில்லை. யுத்த காலத்திலே பரமசிவம் பிள்ளைக்கு அடித்த யோகத்தின் நிழழ்கூட வல்லிபுரத்தின் மேல் விழவில்லை. பரமசிவம் பிள்ளை செல்வச் சீமானென்ற அந்தஸ்தை நோக்கி மிக வேகமாக ஓடினார். வல்லிபுரமோ ஒரு அடிகூடப் பெயர்த்து வைக்கவில்லை. நின்ற இடத்திலேயே நின்றான்.


-------------------


அனுபந்தம் .2

1891 முதல் 1962 வரை ஈழத்தில் உருவான தமிழ் நாவல்கள்


வருடம் நூற்பெயர் ஆசிரியர்

1891 ஊசோன் பாலந்தை கதை எஸ். இன்னாசித்தம்பி
1895 மோகனாங்கி த. சரவணமுத்துப்பிள்ளை
1904(?) கலாமதி (?) சுவாமி சரவணமுத்து(?)
1905 வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம் சி.வை. சின்னப்பபிள்ளை
சந்திரகாதன் கதை
1904(?) அழகவல்லி எஸ். தம்பிமுத்துப்பிள்ளை
1905(?) சுந்தரன் செய்த தந்திரம் " "
பரிமளா-ராகவன்
1916 விஜயசீலம் சி.வை.சின்னப்பபிள்ளை
உதிரபாசம் " "
இரத்தினபவானி " "
1921 கோபால-நேசரத்தினம் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை
1922 மேகவர்ணன் வே.வ.சிவப்பிரகாரம்
1924 காசிநாதன்-நேசமலர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை
1924 இராசதுரை செ.செல்லம்மாள்
1924(?) கமலாவதி(?) சபாபதி(?)
1925 நீலகண்டன்
(ஓர் சாதி வேளாளன்) இடைக்காடர்
1925 சித்தகுமாரன் " "
1927 புனிதசீலி Rev.Bro. யோன் மேரி
1927 சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது
நன்னெறிக் களஞ்சியம் அ.நாகலிங்கம்
1929 சரஸ்வதி அல்லது காணாமற் போன
பெண்மணி சு. இராசம்மாள்
1930 பூங்காவனம் மா. சிவராமலிங்கம்பிள்ளை
1932 பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் வரணியூர் ஏ.சி. இராசையா
1934 அரங்கநாயகி வே. ஏரம்பமூர்த்தி
1935 செல்வரத்தினம் வே.க.நவரத்தினம்
1936 அருணோதயம் அல்லது சிம்மக்கொடி சரணியூர் ஏ.சி. இராசையா
1936 (?) மாலை வேளையில் (மொழிபெயர்ப்பு) சி.வைத்திலிங்கம்
1936(?) தேவி திலகவதி
1936 காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி சி.வே.தாமோதரம்பிள்ளை
1938 செல்வி சரோசா அல்லது
தீண்டாமைக்குச் சவுக்கடி எம்.ஏ.செல்வநாயகம்
1938(?) இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி எச்.நெல்லையா
1939(?) சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு " "
1940 (?) காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச்
சாவுமணி (?) " "
(1940-50) சகடயோகம் 'கசின்'
" இராசமணியும் சகோதரிகளும் "
(1950-60) கற்பகம் "
" சொந்தக் கால் "
(1940-50) விதியின் கை உபகுப்தன்
" வெறும் பானை கனக செந்திநாதன்
" வென்று விட்டாயடி ரத்னா வரதர்
" வாழ்க நீ சங்கிலி மன்ன "
" பாசம் சம்பந்தன்
" ரவீந்திரன் 'சுயா'
" ஆப்பக்காரி 'ராமப்பிரேமன்'
" ----- நடேசையர்
" இரு சகோதரர் (முடிவு பெறாதது) பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளை
1942 முதற் காதல் (மொழி பெயர்ப்பு) இலங்கையர்கோன்
1949 மணிபல்லவம் " தேவன்-யாழ்ப்பாணம்
(1940-50) வாடிய மலர்கள் " "
(1950-60) கேட்டதும் நடந்ததும் " "
(1940-50) குந்தளப் பிரேமா கே.வி.எஸ்.வாஸ்
" நந்தினி "
" தாரினி "
" பத்மினி "
" புஷ்பமாலா "
" ஜம்புலிங்கம் "
" சாந்தினி "
" சிவந்திமலைச் சாரலிலே "
(1950-55) மலைக்கன்னி "
" உதயக்கன்னி "
1951 புகையில் தெரிந்த முகம் அ.செ.முருகானந்தம்
1957 யாத்திரை "
1953 அனிச்சமலரின் காதல் வே. தில்லைநாதன்
" பூஞ்சோலை கலாநிதி, க.கணபதிப் பிள்ளை
1954 வாழ்க்கையின் வினோதங்கள் "
1957 பிரேமாஞ்சலி வி.லோகநாதன்
1962 பாரிஸ்டர் சிற்றம்பலம் "
(1950-55) அன்னபூரணி க.சச்சிதானந்தன்
" ஒன்றரை ரூபாய் க.நாகப்பு
" ஏழையின் காதல் "
1954 ஆசை ஏணி த. சண்முகசுந்தரம்
1953 வாடாமலர் சுலோசனா
1952 ரஞ்சிதம் மாயாவி
1950.55 மிஸ் மனோகரி நவம்
1950-55 இவளைப்பார் எம்.ஏ.அப்பாஸ்
" மூன்று பிரதேசங்கள் "
" ஓரே ரத்தம் "
" சி.ஐ.டி, சிற்றம்பலம் "
" சிங்களத்தீவின் மர்மம் "
" யக்கடையாவின் மர்மம் "
" ----- அ.சிதம்பரநாதபாவலர்
" சதியில் சிக்கிய சலீமா டி.எம்.பீர்முகம்மது
" கங்காணி மகள் "
" தங்கப்பூச்சி இராஜ அரியரத்தினம்
" தீண்டாதான் (மொழிபெயர்ப்பு) கே.கணேஷ்
" பண்டிறாளை கே.பீ.முத்தையா
1950-55 காதற் பலி சுதர்ஸன்
1955 மரணத்தின் வாயிலில் சாந்தி
1950-60 காற்றிற் பறந்த கருங்காலிக் குதிரை எம்.செயினால் ஆப்தீன்
1950-55 வீரமைந்தன் சி.சண்முகம்
1953 சிங்கை ஆரியன் வெள்ளிவீதியார்
1950-55 கபட நாடகம் வே.க.ப.நாதன்
1950-60 ஓரே அணைப்பு இளங்கீரன்
" மீண்டும் வந்தாள் "
" பைத்தியக்காரி "
" பொற்கூண்டு "
" கலா ராணி "
" மரணக் குழி "
1950-60 காதலன் இளங்கீரன்
" அழகு ரோஜா "
" வண்ணக் குமரி "
" காதல் உலகிலே "
" பட்டினித் தோட்டம் "
" நீதிபதி "
" எதிர்பார்த்த இரவு "
" மனிதனைப் பார் "
" புயல் அடங்குமா? "
" சொர்க்கம் எங்கே? "
" தென்றலும் புயலும் "
" மனிதர்கள் "
" மண்ணில் விளைந்தவர்கள் "
" நீதியே நீ கேள்! "
" இங்கிருந்து எங்கே? "
" மலர்ப் பலி சொக்கன்
1961 செல்லும் வழி இருட்டு "
1955-60 கொழுகொம்பு வ.அ.இராசரத்தினம்
" துறைக்காரன் "
1961 நெடுந்தூரம் கே.டானியல்
1959 வாழ்வற்றவாழ்வு சி.வி.வேலுப்பிள்ளை
1962 வீடற்றவன் "
1955-60 உனக்காக கண்ணே சிற்பி
" இதயவானிலே உதயணன்
" மனப்பாறை "
" தீ எஸ்.பொன்னுத்துரை
1955-62 வண்ண மலர் எட்டுப் பேர்
1955-62 மத்தாப்பு ஐந்து பேர்
" அலைகள் கச்சாயில் இரத்தினம்
" "
" மாலதியின் மனோரதம் அருள் செல்வநாயகம்
" காண்டீபன்
" சிந்தித்துப் பார் பாயல் தாஹ’ர்
" யார் கொலைகாரன்? மு.வே.பெ.சாமி
" காணிவல் காதலி புதுமைலோலன்
" தாலி "
" கோமதியின் கணவன் த.சண்முகநாதன்
" கொந்தளிப்பு செ.சி.பரமேஸ்வரன்
" காதல் பைத்தியம் "
" கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு எம்.பி.எம். முகம்மதுக் காசிம்
நாகரிக நிர்மலா அல்லது
" மலைக்குறத்தி மகள் வியாசக விதரணன் எஸ் முத்தையா
" ஈரக் கொலை வீ.ஆ. புரட்சிமணி
" நிறுபூத்த நெருப்பு பாத்திமா மொகிதீன்
" பயங்கரக் கனவு ஹுசேன்
" காலேஜ் காதல் தெல்லியூர் செ. நடராஜா



***** ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி *** முற்றும்
யதார்த்த இலக்கியத்துக்குத் தகுந்த உதாரணம்

1951ம் ஆண்டு தொடக்கம் அவரது நாவல்களை முறையே நிரைப்படுத்தினால், "ஒரே அணைப்பு", "மீண்டும் வந்தாள்", "பைத்தியக்காரி", "பொற்கூண்டு", "கலாராணி", "மரணக் குரி", "காதலம்", "அழகு ரோஜா", "வண்ணக் குமரி", "காதல் உலகிலே", "பட்டினித் தோட்டம்", "நீதிபதி", "எதிர்பார்த்த இரவு", "மனிதனைப் பார்", "புயல் அடங்குமா?", "சொர்ககம் எங்கே?", "தென்றலும் புயலும்", "மனிதர்கள்", "மண்ணில் விளைந்தவர்கள்", "நீதியே நீ கேள்", "இங்கிருந்து எங்கே?" என்று இருபத்தொரு நாவல்கள் தேறுகின்றன.

நாவல்களின் தொகையாலும், காலத்தாலும் இளங்கீரனை இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் உரித்தாக்கினாலும், தரத்தால் அவர் இந்த ஆறு ஆண்டுகளில்தான் நாவல் துறையில் தன் ஆழமான முத்திரையைப் பதித்திருக்கிறாரென்று சொல்லவேண்டும். அவருடைய நாவல்களிரண்டும் தலைசிறந்த பிறமொழி நாவல்களுடனும் சமமாகத் தலைநிமிர்ந்து நிற்கும் தகுதி வாய்ந்தவை. நாவல் எழுதம் திறமையால் மாத்திரமே, தனக்கென்று இலங்கையில் மிகப் பெரும் வாசகர் கூட்டத்தைச் சம்பாதித்து வைத்துக் கொண்டிருக்கிறவர் இவர்.

ஈழத்திலும், பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலும் வாழுகின்ற கிராம மக்களினதும், ஏழை எளியவர்களினதும் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கூர்ந்து நோக்கி, அனுபவ உணர்வோடு, அந்தப் பிரச்சினைகளைத் தீர்பபதற்கு மார்க்கங் காணும் முயற்சிகள் என்று, இளங்கீரனுடைய மிகப் பிந்திய நாவல்களை வர்ணிக்கலாம். யதார்த்த இலக்கியம், சோஷலிஸ யதார்த்த இலக்கியம் என்று நாளும் பொழுதும் மந்திரோச் சாடனம் நடைபெறுகிற இன்றைய ஈழத்து இலக்கிய உலகில், யதார்த்த இலக்கியங்களை எங்கே படைத்திருக்கிறீர்களென்று எவராபது கேட்டால், தைரியமாகத் தூக்கிக் காட்டுவதற்கு, நாவல்களைப் பொறுத்த வரையிலாவது, இளங்கீரனின் கதைகள் மாத்திரமே கதி.


கதாசிரியர்களின் கவனம் திரும்பியது

இலங்கையின் இன்றைய முன்னணிக் கதாசிரியர்கள் பலரும் நாவல் துறையில் தமது கவனத்தை அதிகம் திருப்பி, இந்த ஆறு வருடங்களில் சில நல்ல நாவல்களைப் படைத்தளித்திருக்கிறார்கள். சொக்கன், வ.அ.இராசரத்தினம், டானியல், சி.வீ. வேலுப்பிள்ளை, சிற்பி, உதயணன், எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

சில வருஷங்களின் முன்னரே "மலர்ப்பலி" என்னும் நாவலை எழுதிப் பெற்ற அனுபவத்தின் சீர்மை தென்படுமாறு, 1961ல், தினகரனில், "செல்லும் வழி இருட்டு" என்ற தனது நாவலைத் தொடர்கதையாக எழுதினார் சொக்கன்.

வ.அ.இராசரத்தினத்தின் "கொழு கொழும்பு", 'ஈழகேசரி'யிலும், "துறைக்காரன்" 'ஈழநாட்டி'லும் தொடர்கதைகளாக வெளிவந்தன. "கொழு கொம்பு" பின்னர் நூலுருவில் வெளிவந்து சுமாரான வரவேற்பைப் பெற்றது.

சிறுகதைத் துறையில் சுமாரான வெற்றியைப் பெற்றிருக்கும் டானியல், "வீரகேசரி"யில் 1961ம் ஆண்டு எழுதிய "நெடுந் தூரம்" என்ற நாவல் அவருடைய சிறுகதை எழுதும் ஆற்றலைத்தான் மேலும் வலியுறுத்திக் காட்டியது.

சீ.வீ.வேலுப்பிள்ளை தினகரனில் மூன்று வருஷங்களின் முன்னும் "வீரகேசரி"யில் சில மாதங்களின் முன்னும் முறையே வெளியிட்ட "வாழ்வற்ற வாழ்வு", "வீடற்றவன்" ஆகிய நாவல்கள், மலை நாட்டு மக்களின் வாழ்கையை ஓரளவு சித்தரித்துக் காட்டின.

'கலைச் செல்வி'யில் அதன் ஆசிரியர் 'சிற்பி' "உனக்காக கண்ணே" என்ற நெடுங்கதையையும் "உதயணன்", "மனப்பாறை" என்ற நாவலையும் எழுதினர். உதயணனின் "இதய வானிலே" என்ற நாவல் ஒன்றும் 'ஈழதேவி' சஞ்சிகையில் வெளிவந்தது.


பொன்னுத்துரையின் 'தீ'

'பணியாரமில்லாத சலசலப்பிலும்' சமயா சமயங்களில் ஈடுபடுவதன் விளைவாக, 'பிரச்னையாளர்' என்று ஒரு 'பழிகரப்பான ஸ்துதி'க்கு இலக்காவிட்ட போதிலும், இலக்கியத் துறையிற் 'கை வைத்து' முன்னேறக் கூடிய சூரத்தனத்தின் சுவடுகளைத் தன் எழுத்துக்களிற் காட்டி வரும் எஸ். பொன்னுத்துரை எழுதிய 'தீ' என்னும் நாவல், இந்த வருஷத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. நூலுருவில் வெளியான ஈழத்து நாவல்களில் மிகச் சமீபத்திய நவீன நூல் இதுவே. பொன்னுத் துரையின் பல்வேறான திறமைகளையும் புலப்படுத்திக் காட்டுகிற இந்த நாவல், நாவலுக்கரிய உருவ அமைதிகள் நன்மையைப் பெறாத போதிலும், கதாவஸ்துவைப் பொறுத்தவரையில், தமிழுக்கு, ஒரு துணிச்சலான முயற்சியென்பதை மறுக்கமுடியாது. உடலுறவும் பிரச்னைகளைக் கருப் பொருளாகக் கொண்டெழுந்திருக்கும் இந்த நாவலில், பாலுணர்ச்சி விவகாரங்களைப் பச்சை பச்சையாக வர்ணிக்கும் அதே சமயத்தில், அவற்றுக்குப் பக்குவமானவை போலப் போக்குக் காட்டக்கூடிய அந்தஸ்தையும் கொடுத்து எழுதியிருக்கும் ஆசிரியரின் கொட்டித்தனத்தை ஒரு வகையல் மெச்சலாம். கதாசம்பவங்களின் ருசிப்பிசமான அம்சங்களின் அடி நாதமாக இழையோடு தனி மனித சோகத் தவிப்பிலும் உள்ளம் பற்றுமாறு, "தீ" அமைந்திருக்கிறதென்று சுருக்கமாகக் குறிப்பிடலாம்.


ஆளுக்கொரு அத்தியாய நாவல்கள்

பெயர் பெற்ற எட்டுச் சிறுகதையாசிரியர்கள் சேர்ந்து ஆளுக்கொரு அத்தியாயமாக, தினகரனில் "வண்ணமலர்" என்ற நாவலைச் தொடராக எழுதியமையும், இதேபோல ஐந்து சிறு கதையாசிரியர்கள் சேர்ந்து "வீரகேசரி"யில் "முத்தாப்பு" என்றநாவலைத் தொடராக எழுதியமையும், இந்தக் காலப் பிரிவின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் "மத்தாப்பு" பின்னர் நூலாக வெளிவந்திருக்கிறது.

இவை தவிர, கச்சாயில் இரத்தினம் தினகரனில் எழுதிய "அலைகள்" என்ற நாவலும், "விவேகி"யில் எழுதிய 'வன்னியின் செல்வி' என்ற நாவலும், 'அன்பு எங்கே?' என்னும் ஒரு தொடர்கதை நாவலும், அருள் செல்வநாயகம் தினகரனில் எபதிய "மாலதியின் மனோரதம்" என்ற நாவலும் 1953ம் வருஷ ஹர்த்தாலைப் பின்னணியாக வைத்து "காண்டீபன்" என்பவர் "தேசாபிமானி"யில் எழுதிய தொடர் நவீனமும் இங்கு குறிப்பிட வேண்டியவை. (கச்சாயில் இரத்தினத்தின் "விடிவு நோக்கி" என்ற நாவல் இப்போது தொடர் கதையாக வந்துகொண்டிருக்கிறது.)

இவை தவிர, இந்தப் பன்னிரண்டு வருட காலத்தில் வேறு நெடுங்கதைகளும் வெளியாகின. நாவல்களென்று கருதி வெளியிடப்பட்ட போதிலும், குறைப் பிரசவங்களாகவும் சில்லறைக் கதைகளாகவும் அமைந்துவிட்ட இவற்றைப் பின்வருமாறு பட்டியல் போட்டு, விட்டு விடலாம்.

காயல்தாஹ’ர் எழுதிய "சிந்தித்துப் பார்".

மு.வே.பெ.சாமி எழுதிய "யார் கொலைகாரன்?".

புதுமைலோலன் எழுதிய "காணிவல் காதலி", "தாலி".

தா. சண்முகநாதன் எழுதிய "கோமதியின் கணவன்".

செ.சி. பரமேஸ்வரன் எழுதிய "கொந்தளிப்பு", "காதல் பைத்தியம்".

வியாசக விதரணம் எஸ். முத்தையா எழுதிய "நாகரிக நிர்மலா அல்லது மலைக் குறத்தி மக்ள்".

வீ.ஆ. புரட்சி மணி எழுதிய "ஈரக்கொலை".

பாத்திமா மொஹ’தீன் எழுதிய "நீறு பூத்த நெருப்பு".

ஹுசெய்ன் எழுதிய "பயங்கரக் கனவு".

தெல்லியூர் செ. நடராசா எழுதிய "காலேஜ் காதல்".


இறுவாய்

1981ல் தோன்றிய "ஊசோன் பாலந்தை கதை" முதல், இந்த வருஷம் வந்து சேர்ந்த "தீ" வரை, ஈழத்துத் தமிழ் நாவல்களில் ஏறத்தாழ அனைத்தையும் பற்றிப் புறனடையாகவே இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். இதன் தோற்றுவாயில், "ஈழத்துத் தமிழ் நாவல் பற்றிய பிரஸ்தாபம், இது காலவரை, இவ்வளவே, என்று நான் குறிப்பிட்டவற்றை, முடிந்த முடிபாகக் கொள்ள வேண்டியதில்லை.

சுதந்திரனில் வெளிவந்த "அறிமுகப் படுத்துகிறோம்" என்ற பத்தி போன்ற சிறு முயற்சிகள் சிலவற்றிலும், ஆங்காங்கே இரண்டொரு இலங்கைத் தமிழ் நாவல்களின் பெயர்கள் வரத்தான் செய்திருக்கின்றன. இத்தகைய சில்லறைக் குறிப்புகளைத் தவிர, நமது நாட்டுத் தமிழ் நாவல்கள் பற்றிச் சற்று முனைப்போடு ஆராய முற்படும் குறிப்புகள் நமக்கு வழிகாட்டியாகக் கிடைப்பதாயில்லை யென்பதைத் தெரிந்துகொண்டால் சரி.

ஆக, முன் குறித்தபடி, இந்தக் கட்டுரை, ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிப் பின்னர் விரிவாக எவராயினும் ஆராய்வதற்குத் தூண்டுகோலாகவும், ஓரளவு ஊன்றுகோலாகவும் அமைந்திருந்தால், தற்போதைக்கு அது போதும்.


அனுபந்தம் I

[ஈழத்துத் தமிழ் நாவல்களின் நடை எவ்வாறு காலப் போக்கில் மாற்றம் பெற்று வந்ததென்பதை, இங்கு ஆங்காங்கே தேர்ந்தெடுத்துக் காட்டியிருக்கும் பல்வேறு நாவல்களில் வரும் வசனங்களின் செல்கதியிலிருந்து கண்டு கொள்ளலாம்.]


எஸ். இன்னாசித்தம்பி எழுதிய
'ஊசோன் பாலந்தை கதை'யிலிருந்து (1891)

உலகின் கண்ணே உயர்வுற விளங்கும் அது மான்ய வென்னும் பொலிவுறு தேசத்தில் அரசர் குலத்தில் அதிக சங்கைபோந்த பெற்றோரால் அலெக்சாந்தர் என்பவர் பிறந்து, சிறுவயதில் அவருடைய அன்னை தந்தை மரணமடைந்த பின் பல சிற்றரசர்களைத் தமக்குத் கீழாகக் கொண்ட பெரிய அரசர் என்ற கருத்துள்ள எம்பரதோர் என்னும் உத்தியோகம் பெற்று அவ்வூரை அரசாட்சி செய்து வந்தார்.

மற்றொருபந்தி (1891)

நாம் மன்றல் செய்ய உங்களுக்கு விருப்பமானால் உங்கள் விருப்பத்தின்படி புத்தி விமரிசையுடையவளான ஓரணங்கைத்தேடி வாருங்களென்று பிரதிவாதித்தார். இந்த வாக்கையவர்கள் கேட்டவுடன் ஆதித்தனைக் கண்டலர்ந்த சரோருகம் போல் இருதயம் மலர்ந்து, மனோகரமாய்த் தங்களுக்குள் வினவிசி சருவேசுவரனைத் துதித்துச் சக்கரவர்த்திக்குச் செய்ய வேண்டிய ஆசார நமஸ்காரங்களையும் செய்து தங்கள் தங்க ளகத்துக் கேகினார்கள். அப்படியே அவர்கள் கூடிய வீரர்களில் அதிக சங்கை போந்தவர்களும் மிக சாமர்த்திய கெம்பீரமுள்ளவர்களுமான பன்னிரு தானாதிபதிகளைத் தெரிந்து அரசனுக்கிணங்கியது வாலிபப் பெண்களிருக்குமிடங்களிற்போய் விசாரித்து வாருங்களெனச் சொல்லி யனுப்பினார்கள்.


த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய

'மோகனாங்கி'யில் வரும் ஒரு பாடல் (1895)

நீதி தவறத் தருமம் நிலைகுலையச்
சாதிகுலம் பிறப்பென் றெண்ணித் தடுமாறும்
பேதையேம் எம்பால் இரங்குதியாற் பேரறிவின்
சோதியே நின்னைத் தொழுதேம் தொழுதேமால்.

மா.சிவராமலிங்கம் பிள்ளை எழுதிய
'பூங்காவனம்' நூலிலிருந்து (1930)

1884-ம் வருடம் ஆடி மாதம் 24ம் தேதி புதன்கிழமை இரவு எழரை மணியளவில் வண்ணை மாநகரில் 1-ம் குறுக்குத் தெருவில் 82-ம் இலக்க வீட்டுக்குச் சுமார் கால்மைல் தூரத்தில் சுமார் பதினாறு வயசுடையவளும் பூரண சந்திரன் போன்ற முகத்தையும் சைவலத்தையும் யொத்த கூந்தலையும் மூன்றாம் பிறையையொத்த நுதலையும் கயல்மீன் போன்ற கண்களையும் வள்ளியிலை போன்ற காதுகளையும் பவளத் துண்டம் போன்ற அதரங்களையும் எட்பூவை நிகர்த்த நாசியையும் கண்ணாடி போன்ற கபோலங்களையும் வலம்புரிச் சங்கனைய கழுத்தையும் மூங்கில் போன்ற தோள்களையும் கரும்பையொத்த முன் கைகளையும் தாமரை மலரையொத்த அங்கைகளையும் செவ்விளநீர் போன்ற தனங்களையும் ஆவிலை போன்ற வயிற்றையும் உடுக்கை நிகர்த்த இடையையும் அலவனை நிகர்த்த காற்சிப்பிகளையும் இளவரால் போன்ற கணுக்கால்களையும் படம் போன்ற பாதங்களையும், வட்ட மதி போன்ற நகங்களையும் உடையவளுமான ஒரு பெண்மணி இட்டடி நோவ எடுத்தடி கொப்பளிக்க நடந்துவரும் போது, எதிர்முகமாகச் சிறிது தூரத்திற் சம்பாஷ’த்துக் கொண்டு வந்த இரு துஷ்ட வாலிபர்கள் அப்பெண்மணியைக் கண்டு மதுவருந்திய மயக்கத்தினால் அறிவு மயங்கித் தள்ளாடி அவ்விடம் வந்து அவளைத் தூக்கிக் கொண்டோடுதற்கு எத்தனித்தார்கள்.


நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர் எழுதிய
'சாவித்திரி'யிலிருந்து (1914)

"இன்னடிசில் புக்களையும் தாமரைக் கைப் பூநாறும் செய்ய வாய் மக்களை"யில்லாத மனை என்ன மனை? மக்கட் செல்வம் இல்லாதார் செல்வம் என்ன செல்வம்? மக்கள் மெய் தீண்டி இன்பம் அடையாத யாக்கை என்ன யாக்கை? குறுகுறு நடக்கும் கோமக்கள் பால்வாய்ச் சிறு குதலை கேளாச் செவி என்ன செவி? இம்மையிலே இன்பத்தைத் தருவதும் மறுமையிலே சுவர்க்கத்தைத் தருவதும் மக்கட் பேறேயாகும். ஒருவன் சத்திய விரதம் உடையவனாயினுமென்? தானம் தவம் முதலிய நல்லொழுக்க முடையவனாயினுமென்? அவற்றால் அவன் பயன் அடைவதில்லை. மக்கட் பேற்றினாலன்றோ அவன் பெரும் பயனடைகிறான். கற்றவர்கள் சபைப்கு அலங்காரத்தைக் கொடுக்கின்றார்கள். சூரியன் ஆகாயத்தை அலங்கரிக்கின்றான். தாமரை வாவிக்கு அழகைக் கொடுக்கின்றது. அதுபோல மக்கட் செல்வமே இல் வாழ்க்கைக்கு அலங்காரமாயிருக்கின்றது.

'மறு மலர்ச்சிக்காலம்'

கன நாவல்கள் எழுதிய கசின்

ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் 'மறு மலர்ச்சிக்காலம்' என்றும் கடந்த முப்பது முப்பத்தைந்து வருட ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் 'பொற்காலம்' என்றும் குறித்த அந்தக் 'கால' விமர்சகர்கள் சிலர் ஆடம்பரமாகக் குறிப்பிட்டு அகமகிழ்ச்சியடைகிற 1940-ம் ஆண்டுத் தொடர் வருடங்களில், 'கசின்' என்கிற க.சிவகுருநாதன், கனக-செய்திநாதன், வரதர், சம்பந்தன், சுயா, ஜே.எஸ். ரவீந்திரா ஆகியோரின் பெயர்கள் நாவலாசிரியர்கள் என்ற வகையில் பளிச்சிடுகின்றன.

'கசின்' என்கிற சிவகுருநாதன், "சகடயோகம்", "இராசமணியும் சகோதரிகளும்" போன்ற சில நாவல்களை இந்தக் காலப் பிரிவிலும், "கற்பகம்", "சொந்தக்கால்" போன்ற சில நாவல்களைச் சமீப காலத்திலும் எழுதியிருக்கிறார். "ஈழகேசரியில்" தொடர் கதைகளாக வெளியிட்ட நாவல்கள் பெரும்பாலானவை. சாதாரணமான ஒரு சிறு கதைக் கருவை வைத்துக் கொண்டு, 'காக்கை உட்காரப் பனம் பழம் விழுகிற' சம்பவங்களை இடைச் செருகலாக்கி, நடுத்தரக் குடும்பங்களையும், கிராமத்துப் பாத்திரங்களையும் பிற்களத்து உபயோகித்து, ஓசைப்படாமல் வாசித்து முடிக்கக் கூடிய நாவல்களை, பரபரப்பில்லாமல் எழுதி முடித்துவிடுவதில் இவர் சமர்த்தர். இவருடைய நாவல்களில் சுளிப்பான அசமந்த நகைச் சுவை பின்னணியில் இழையோடிச் செல்லும்.


மறுமலர்ச்சிக் குழுவினர் எழுதியவை

ஈழம் பெருமைப்படக்கூடிய சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கனக-செந்திநாதன், "விதியின்கை", "வெறும்பானை" ஆகிய இரண்டு நெடுங் கதைகளை எழுதியிருக்கிறார். நம்முடைய பிரதேசத்து மக்களின் வாழ்க்கையைப் பகைப்புலத்தில் வைத்து நாம் எழுதவேண்டுமென்று, அறிவறிந்து இலக்கியம் சமைக்கும் செந்திநாதன், கஷ்டப்படும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைக்கூட, கலை அழகு குன்றாமல் சமத்காரமாகக் கதையாக எழுதக் கூடியவர் என்பதற்கு இந்த நெடுங்கதைகள் உதாரணம். "உபகுப்தன்" வெளிவந்த "விதியின் கை"யளவுக்கு, "வெறும்பானை"யை நாவலியல்புச் சிறப்புடையதென்று தூக்கிச் செல்ல முடியவில்லையென்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

வரதர், 'மறுமலர்ச்சியில் "வென்று விட்டாயடிரத்னா" என்னும் நாவலை எழுதினார். அவர் பிற்காலத்தில் எழுதிய "வாழ்க நீ சங்கிலி மன்ன" என்னும் நூலும் ஒரு நாவலே என்று சிலரால் கருதப்படுகிற போதிலும் விமரிசன நோக்கில் பார்த்தால் அப்படிக்கருத முடியாதென்றே தோன்றுகிறது.

இலங்கைச் 'சிறுகதைத் திரு மூலர்களில்' ஒருவரென்க் கருதப்படும் சம்பந்தன் இதே காலப் பிரிவில் ஈழகேசரியில் 'பாசம்' என்னும் தொடர் கதையை எழுதினார். சாருகாசினி, சாரதா என்னுமிரு பள்ளி மாணவிகளையும் அவர்களின் ஆசிரியர் நாராயணனையும் சுற்றிப் பின்னப் பட்டிருக்கும் சுவையான கதை அது.

தினகரனில் 'சுயா' தொடர் கதையாக எழுதிய "ரவீந்திரன்" என்னும் நாவலும் இதே காலப் பிரிவில் வெளியானதே. இதே காலப் பகுதியில்தான் 'ராமப்பிரேமன்' எழுதிய "ஆப்பக்காரி"யும் தினகரனில் தொடா கதையாகப் பிரசுரமாயிற்று.


நடேசையர், பண்டிதமணி நாவல்கள்

1940-ம் ஆண்டுத் தொடரின் இறுதிப் பாகத்தில் வெளிவந்த "காதல் உள்ளம்" என்னும் நாவல் ஜே.எஸ். ரவீந்திரா என்பவரால் எழுதப்பட்டது. வாசகரை வசப்படுத்தக் கூடிய லளிதமான நடையும், மென்மையான உணர்ச்சிகளின் சலனமும், உள்ளத்தை உருக்கக்கூடிய காதலுறவுப் பிரச்சினைச் சம்பவங்களும் மின்னுகிற இந்த நாவல், 'அகிலன்', 'விந்தன்', 'மாயாவி' ஆகிய மூவரையும் ஒட்டுப் போட்டு உருவாக்கிய ஒருவர் எழுதிய நாவல் போலத் தோற்றமளிக்கிறது.

1940-ம் ஆண்டுத் தொடரில் வரும் இந்தத் தசவருடங்களில் வேறு சில நாவல்களும் வெளியாகின. மலைநாட்டுத் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்த நடேசையர், தாம் ஆசிரியராகப் பணி புரிந்த "சுதந்திரன்" பத்திரிகையில் ஒன்றிரண்டு நாவல்களை எழுதினார் பண்டித மணி சி. கணபதிப் பிள்ளையின் முடிவு பெறாத காலப் பிரிவில்தான். துர்கனீவின் நாவலொன்றை "முதற்காதல்" என்னும் பெயரில் 'இலங்கையர் கோன்' மொழி பெயர்க்க, 1942இல் அது நூலாகப் பிரசுரமாயிற்று. ஆர்.எல். டீவன்சனின் "ட்றெஷர் ஜலன்ட்", "மணி பல்லவம்" என்னும் பெயரில் யாழ்ப்பாணத்துத் தேவனால் தமிழாக்கம் செய்யப்பட்டு 1949இல் நூல்கவடிவம் பெற்றது. தேவனின் "வாடிய மலர்கள்" எழுதப்பட்டதும் ஏறத்தாழ இதே காலப் பிரிவில்தான்.


சிறந்த நாவல்களும் சில்லறைக் கதைகளும்

1950-ம் ஆண்டு தொடக்கம் 1962-ம் ஆண்டு வரையுமுள்ள பன்னிரண்டு வருஷங்களில் ஈழத்துப் பத்திரிகைகளில் தொடர் கதைகளாகவும் நூல் வடிவிலும் வெளி வந்த நாவல்கள் பலதரப்பட்ட இலக்கிய வட்டாரங்களோடு தொடர்பு கொண்டவை. தரமான எழுத்தாளர்கள் மாத்திரமன்றி, ஒழுங்காக வசனம் எழுதத்தெரியாத பலரும் கூட நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்.

நாவல்கள் எழுதுவதற்கென்று தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாடு விதித்துக்கொள்ளாதவர்களும் கூட, நாவல் இலக்கியத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்த பொறுப்புணர்ச்சியுள்ள எழுத்தாளர்களோடு போட்டி போட்டுக் கொண்டு புற்றீசல்களாக நூல்களைப் பெருக்கிய இந்தக் காலத்தில், வெளியான நெடுங்கதைகளோ அனந்தம். இவற்றில் எவற்றையும் தராதரம் பார்த்து ஒதுக்காமல்,அனைத்தையும் தட்டடிப்பார்த்துத் தகவலறிந்து கொள்வது, கையிருப்பை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு அவசியமாயிருக்கலாம். ஆயினம் ஒரு சாதாரண வாசகன் கூட நாவல் என்று கருதாமல் தள்ளிவிடக்கூடிய 'சில்லறைக் கதைகளை', இந்த அஸ்திவாரச் சிறுநூலில் முதலாய்ச் சேர்த்து கொள்ள வேண்டியதில்லையென்றே தோன்றுகிறது. ஆகவே, இந்தப் பன்னிரண்டு வருடங்களில் வெளியான 'சில்லறைக் கதைகளை' ஆராய்வதை நீக்கி, புறம்புபடுத்தி வைத்துக்கொண்டு, ஏனைய நாவல்களனைத்தையும் இங்கு கவனத்திற்கெடுத்துக்கொள்ளலாம்.


தொடர்கதை வாசகர் தொகையைப் பெருக்கியவர்

இந்தப் பன்னிரண்டு வருஷங்களின் முதற்பாதியில், நாவலாசிரியர்கள் என்னும் வகையில் ஓரளவு பிரகாசித்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தேவன், கே.வி.எஸ்.வாஸ், அ.செ. முருகானந்தன், வே.தில்லைநாதன், கலாநிதி, க. கணபதிப் பிள்ளை, வி.லோகநாதன், க.சச்சிதானந்தன், க.நாகப்பு, த. சண்முகசுந்தரம், சுலோசனா, ஈழத்து மாயாவி, நவல், எம்.ஏ. அப்பாஸ், டி.எம்.பீர்முகம்மது, சிதம்பரநாத பாவலர், இராஜ அரியரத்தினர் ஆகியோர் என்று சொல்லலாம்.

"தேவன் - யாழ்ப்பாணம்", ஈழகேசரியில், தான் தொடர்கதையாக எழுதி வந்த "கேட்டதும் நடந்தது•ம" என்னும் நாவலை, பின்னர் நூல் வடிவில் வெயியிட்டார். கண், காது என்று இரண்டு பிரிவுகளோடு, மனோதத்துவ ரீதியில் எழுதப்பட்டது என்ற பாவனையில் ஓரளவு கவனத்தைப் பெற்றது இந்த நாவல்.

இலங்கையோடு தன் வாழ்கையைப் பின்னிக்கொண்டுவிட்ட கே.வி.எஸ். வாஸ், சுமார் பத்து நாவல்களை எழுதியிருக்கிறார். 'அறுபது டன் ரஷ்ய டாங்கி' என்று கல்கியாற் புகழப்பட்ட இந்த அசுரவேக எழுத்தாளரின் நாவல்களும் தீவிரகதியில் செல்லுகிற மர்ம நாவல் வகையைச் சேர்ந்தவை. 'ஆரணி'யையும் 'வடுவூராரை'யும் அடியொற்றியும், சரித்திரக்கதை ரூபத்திலும் "குந்தளப் பிரோமா" நந்தினி (2 பாகங்கள்), "தாரிணி" "பத்மினி" (2 பாகங்கள்) "புஷ்ப மால", "ஜம்புலிங்கம்" "சாந்தினி" போன்ற நாவல்களை முதலிலும், "சிவந்திமலைச் சாரலிலேஞ, "ஈழத்தின் கதை" போன்ற இரண்டொரு நாவல்களைச் சமீபத்திலும் இவர் எழுதியிருந்தாலும், இவருடைய "மலைக்கன்னி", "உதய கன்னி" இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிறந்த, வலிமையான நாவல்கள். ரைடர் ஹக்கார்ட் எழுதிய "ஷ“" "தறிட்டர்ன் ஒவ்ஷ“" ஆகிய நாவல்களைப் படித்தவர்களுக்கும் கூட, அந்த மூலக்கதைகளையும் விடச் சுவைப்படக் கூடிய விதத்தில், இந்திய சரித்திரம் பற்றித் தான் கற்று வைத்திருந்த கைச் சரக்குகளையும் ஜனரஞ்சகமாக எழுதினார். "வீரகேசரி"யின் தற்போதைய ஆசிரியரான இவர் அந்தப் பத்திரிகையில் தன் நாவல்களில் ஒன்றிரண்டு தவிர ஏனைய அனைத்தையும் தொடர்கதைகளாக எழுதினார். தொடர்கதைகளாக வெளிவரும் நாவல்களுக்குத் தொகையான வாசகர்களைத் தன் காலத்தில் பெருக்கிக் கொடுத்த பெருமையையும் ஓரளவு இவரைச் சாரும்.

1950ம் ஆண்டுத் தொடரின் ஆரம்பக் கட்டத்தில் பிரசுரமான "புகையில் தெரிந்த முகம்", ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் பொற்சுடர் என்று பெருமைப் படக்கூடிய அ.செ. முருகானந்தனின் கைவண்ணத்தைக் குறித்துக் காட்டும் குறுநாவல். யாழ்ப்பாணத்து வண்டிற் சவாரியை மையமாகக் கொண்ட ஒரு சிறுகதைக் கருவே இந்தக் குறநாவலாக மறு பிறப்பெடுத்திருக்கிறதென்றாலும், ஈழத்து மண்ணில் ஆழமாக வேர் விட்டு நிற்கும் கதை அது. "யாத்திரை" என்ற மற்றொரு நல்ல குறுநாவலையும் "ஈழகேசரி"யில் தொடர்கதையாக எழுதியிருக்கிறார். 1957ல், "பீஷ்மன்" என்ற புனைபெயருடன் இதை எழுதினார்.

காரை தீவைச் சேர்ந்த பொன்னுடையார் வேலுப்பிள்ளை என்ற புகழ் பெற்ற தமிழாசானின் புதல்வரான அத்துவக்காத்து வே. தில்லைநாதன் " அனிச்ச மலரின் காதல்" என்ற குறுநாவலை 1953ல் வெளியிட்டார். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியராக முன்பு கடமையாற்றிய வாசனை தென்படக் கூடியவாறு ஒரு நல்லொழுக்கப் போதனை நாவலாக இதை அமைத்துவிட்ட இவர், முற்போக்கான சில கொள்கைகளையும் தன்னுடைய நாவலிற் புகுத்திக் காட்டுகிறார். கலாநிதி கணபதிப்பிள்ளையின் முன்னுரையுடன் வெளியானது இக் குறுநாவல்.


கலாநிதி கணபதிப்பிள்ளையின் கதைகள்

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு நாடகங்கள் பல எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞரும், வியாகரண 'விண்ணருமான' கலாநிதி கணபதிப்பிள்ளை, 1953ம், 1945ம் ஆண்டுகளில் முறையே "பூஞ்சோலை", "வாழ்க்கையின் வினோதங்கள்" ஆகிய நாவல்களை வெயிட்டார். ஜெர்மானிய எழுத்தாளர் தியடோர்ஸ்தம் எழுதிய "இமென்ஸே" என்னும் கதையின் தழுவல் "பூஞ்சோலை", "வாழ்க்கையின் வினோதங்கள்" என்ற நாவலும், பிறமொழிக் கதையைப் படித்த மன அருட்சியில் விளைந்ததுதான். ஆயினும், யாழ்ப்பாண மக்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய ஒரு கணிப்பை வெளியிடும் சுவையான கதைகளாக இவை அமைந்திருக்கின்றன.


கலைமுதிர்ச்சி கொண்ட "லோகு"வின் நாவல்கள்

"வீரகேசரி"யின் வாரப்பதிப்பு ஆசிரியர் வி.லோகநாதனின் "பிரேமாஞ்சலி" என்ற நாவல், சரித்திரப் பின்னணியில், ஆத்மானுவப ரீதியான காதல் கடமை-தர்மம்-தத்துவம் யாவற்றையும், மனோசலன ரீதியில் உணர்ச்சிப் பின்னலாக்கிச் செல்கிறது. உள்ளத்தைச் சிறைப்படுத்தும் கலைமுதிர்ச்சி கொண்ட வசன நடையழகும், நமக்கே நடந்தது போன்ற ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாத்திரங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திச் செல்லும் உத்தியும் 1956ல் வெளியான இந்த நாவலின் தனிச்சிறப்புகள். "அம்பிகாபதி" என்ற புனைபெயருடன் தற்போது "வீரகேசரி"யில் இவர் எழுதி வரும் "பாரிஸ்டர் சிற்றம்பலம்" என்ற நாவல் செல்லும் கதியில், இந்தச் சிறப்புக்கள் மேலும் வலிவு பெற்றிருப்பதைக் காணலாம்.

'பாட்டில் ஒரு வரியைத் தின்று களிப்பேன்' என்று உணர்ச்சி வெறியோடு கவிதை பாடும் க. சச்சிதானந்தனின் "அன்னபூரணி" என்ற நாவலும், க நாகப்புவின் "ஒன்றரை ரூபாய்" என்ற நாவலும் "ஏழையின் காதல்" என்ற பெயரில் வெளியான நாவலும், இப்பொழுது எழுத்துத் துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் நல்ல நாவலாசிரியர் த. சண்முகசுந்தரம் 1954ல் சுதந்திரனின் தொடர்கதையாக எழுதி வந்த "ஆசை ஏணி" என்ற நாவலும், அதே பத்திரிகையில் 1953ல் "சுலோசனா" எழுதிய "வாடாமலர்", 1952ல் "மாயாவி"யால் எழுதப்பட்டுப் பிரசுரமான "ரஞ்சிதம்", நவல் எழுதிய "மிஸ்.மனோகரி," ஆகிய நாவல்களும்,குறித்த இந்தக் காலப் பிரிவில் வெளிவந்தவை.


மலைநாட்டுப் பேச்சுத் தமிழ் நாவல்

ஈழத்திற்கு வந்து சொற்ப காலமிருந்து "துரோகி", "கள்ளத்தோணி" முதலிய நாடக நூல்களை வெளியிட்டுப் பரபரப்பூட்டி, பிறகு இந்தியாவுக்குக் குடி பெயர்ந்து சென்ற எம்.ஏ. அப்பாஸ’ன் "இவளைப் பார்" "மூன்று பிரதேசங்கள", "ஒரே ரத்தம்" "சி.ஐ.டி. சிற்றம்பலம்", "சிங்களத் தீவின் மார்மம்" "யக்கடையாவின் மர்மம்" போன்றமர்ம நாவல்களும் இந்தக் காலகட்டத்தில் நூல்களாகவும் தொடர்கதைகளாகவும் வெளிவந்து கவனத்தைப் பெற்றன.

இந்தக் காலப் பிரிவில் பிரசுரமாகி வந்த 'நவஜ“வன்' பத்திரிகையில், சிதம்பரநாத பாவலர் தொடர்கதையாக எழுதிய நாவலையும், டி.எம்.பீர்முகம்மது ஹமீதா பானு என்ற புனைபெயருடன் நூல்களாக எழுதிய 'சதியில் சிக்கிய சலீமா', 'கங்காணி மகள்" குறுநாவல் என்ற வகையிற்கூடி குறைப் பிரசவமென்றாலும், மலைநாட்டுத் தமிழர்களின் பேச்சு வழக்குத் தமிழை அந்த நாவலில் பீர்முகம்மது கையாண்டிருப்பதுபோல வெற்றிகரமாக, வேறெவரும், வேறெந்த நூலிலும் கையாளவில்லை என்று சொல்லவேண்டும்.

இந்தப் பன்னிரண்டு வருடங்களின் முற்பாதி என்ற காலப் பிரிவிலே "தங்கப் பூச்சி" என்ற நாவலை இராஜ. அரியரத்தினம் எழுதினார். இந்தக் காலப்பிரிவில் நாவலாசிரியர்களாக ஓரளவு பிரகாசித்தவர்களென்று குறிப்பிட்ட இவர்கள் போக, வேறுபலரும் நெடுங்கதைகளை எபதியிருக்கிறார்கள். இவற்றில் சில மாத்திரமே குறிப்பிடத்தக்கவை.


குறிப்பிடிக்கூடிய வேறு சில நெடுங்கதைகள்

முல்க் ராஜ் ஆனந்தின் நாவலைத் தமிழாக்கி, "தீண்டாதான்" என்ற பெயரில் வெளியிட்டார் கே. கணேஷ்.

'பாணன்' என்ற சஞ்சிகையில் வெளிவந்தது ஒரு தொடர்கதை.

'சமூகத் தொண்டன்' பத்திரிகை ஆசிரியர் க.பே.முத்தையா தன்னுடைய பத்திரிகையில் "பண்டிறாளை" என்ற பெயரில் ஒரு நாவலைத் தொடர்ந்து எழுதினார்.

'கலைச் சுடர்' சஞ்சிகையில் 'சுதர்ஸன்' 'காதல் பலி' என்ற நாவலை எழுதி வந்தார்.

"சாந்தியி"யின் "மரணத்தின் வாயிலில்" என்ற நாவல், காதல் பற்றிய காண்டேகரின் இலக்கியக் கொள்கைக்குச் சவால் விடும் கதை என்று கட்டியம் கூறிக்கொண்டு 1955ம் ஆண்டில் 'சுதந்திரன்' பத்திரிகையில் சுமார் எட்டு மாதங்களாகத் தொடர்கதையாகப் பிரசுரமாயிற்று.

"காற்றில் பறந்த கருங்காலிக் குதிரை" என்ற சரித்திர நாவலை "இஸ்லாமிய தாரகை" என்ற பத்திரிகையில் எம். செயினுல் ஆப்தீன் என்பவர் தொடர் கதையாக எழுதினார்.

'சுரபி' பத்திரிகையில் "வீரமைந்தன்" என்ற மற்றொரு வரலாற்று நாவலும் சி. சண்முகத்தால் எழுதப்பட்டுத் தொடர்கதையாகப் பிரசுரமாகி வந்தது.

"தினகரனில்" வெள்ளிவீதியார் எழுதிய "சிங்கை ஆரியன்" 1953ல் வெளிவந்து கொண்டிருந்தது.

வே.க.ப. நாதன் தினகரனில் எழுதிய "கபட நாடகம்" இதே காலப் பிரிவைச் சேர்ந்தது.

இவையே குறிப்பிடக் கூடிய நாவல்கள்.


இளங்கீரன் சகாப்தம்

இந்தப் பன்னிரண்டு வருடங்களின் முற்பாதி போனால், எஞ்சியிருப்பது 1956 முதல் 1962 வரையுள்ள இந்த ஆறு வருட காலம். இந்தக் காலப் பிரிவில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பூரண உருவமும் தாக்கமும், ஈழத்து நாவல் எந்ற அழுத்தமான முத்திரையும் பெற்றுப் பொலிகிறது என்று சொல்வது தவறல்ல. உலகின் இன்றைய பிற மொழி நாவல்களுடனும், தமிழ் நாட்டின் இன்றைய பிற மொழி நாவல்களுடனும், தமிழ் நாட்டின் இன்றைய தரமான நாவல்களுடனும் சமமாகத் தராசுத் தட்டில் நிற்கக் கூடிய இரண்டொரு நாவல்களாவது இந்த ஆறு வருட காலத்திற் பிறந்திருக்கின்றன என்று துணிந்து சொல்லலாம்.

இத்தனை துணிவோடு ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிச் சொல்ல வைக்கக்கூடிய சாதனையை நிறைவேற்றிய பெருமையின் பெரும் பங்கு, இலங்கையின் நாவல் இலக்கிய வானத்து விடிவெள்ளியாக இன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இளங்கீரனைச் சாரும். 1950 முதல் இற்றை வரையுள்ள இந்தப் பன்னிரண்டு ருட காலத்திய ஈழத்துத் தமிழ் நாவல்களின வளர்ச்சி என்பதும் அநேகமாக இளங்கீரனுடைய வளர்ச்சிதான் என்று சொல்லவேண்டும். 1950ம் ஆண்டு தொடக்கம், தொடர்ந்து வருகிற ஒவ்வொரு வருஷத்திலும் நாவல் எழுதும் சாதனையில் தன்னுடைய முத்திரையைப் பதித்துக்கொண்டு வளர்ந்து வந்திருக்கிறார் இளங்கீரன். வருஷத்துக்கு வருஷம் அவர் நாவல்களை எழுதிய காகிதங்களில் அவருடைய பேனா மென்மேலும் அழுத்தமாகப் பதிந்துகொண்டு நகர்ந்திருக்கிறது.

1951ல் அவர் நாவல்கள் எழுத ஆரம்பித்தார். பன்னிரெண்டு வருஷங் கழித்து இப்பொழுது திருப்பிப் பார்க்கிறபோது, வருஷத்துக்கு சுமார் இரண்டு நாவல்கள் தேறும்படியாக அவர் இருபதுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதிவிட்டாரென்பது தெரிகிறது. ஆரம்பத்தில் அவர் நாவல்களில் காணப்படாத உருபச் சிறப்பு, பொருள் சிறப்பு, நடைச் சிறப்பு யாவும், 1956ம் ஆண்டுக்குப் பிற்பட்ட அவரது நாவல்களில் தலைகாட்டி, இந்த மூன்று நான்கு வருஷங்களில் பூரண முதிர்ச்சி பெற்றிருக்கின்றன.

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!