Monday, February 27, 2012

பாரதி சுதந்திர வேட்கை





பாரதி சுதந்திர வேட்கை தொண்டையை வரளவைத்த காலகட்டத்தில் , வேட்கை த்ணிக்க விடுதலை நீரை தேடித் திரிந்த நெருப்புப் பறவை . வான வெளிகளின் எல்லைகளை சிறகசைப்பில் அழித்தபடி பறந்த அந்தப் பறவையை பெண்ணிய சோதனைக்குள் இட்டு வெல்லுமா எனச் சட்டம் கட்டிப் பார்ப்பது கூட எனக்கு உடன் பாடில்லை.

இன்றும் தேசிய விடுதலையோடு பெண் விடுதலையையும், சக மனிதத்தின் விடுதலையையும் சேர்த்து நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகள் கழித்தும் எண்ணிப் பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றவர்களின் மத்தியில் இருளைச் சுமந்தபடி பொழுதைக் கழித்த மானிடர்க்கிடையில் , விடியலின் விண்மீனை விதைத்தவன் பாரதி. தேச விடுதலையோடு ,பெண் விடுதலையை மனதளவிலாக எந்த விதத்திலும் குறைவாக சிந்திக்காதவன் . இன்று நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு விண்மீனை வாசிக்கத் தருவது நமது கடமையாகின்றது

விடுதலை என்ற உணர்வு காணுமிடமெல்லாம் நிரம்பி வழிய வேண்டுமென்பதை வேட்கையாக தாங்கித் திரிந்த பாரதி நாட்டு விடுதலையை உயர்த்திப் பிடித்த போதும் , காடனும் மாடனும் உணர்வு பெறுவதையும் , பெண்கள் பெரும் சக்தியாக உணரப் படுவதின் மூலம் விடுதலை உணர்வு பெறுவதையும் கவிதைகளில் கொட்டித் தந்தவன் பாரதி.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வோர் விசயங்கள் அன்றைய யதார்த்தத்தை முன்னிட்டு முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் பாரதியின் சிந்தனையில் முதன்மைப் படுத்தப் பட்டிருப்பது அன்றைய அடிமை மனோபாவ எதிர்ப்பும் அதிகார வர்க்கத்திடமிருந்து விட்டு விடுதலையாவதுவும்

அந்த அடிமை மனோபாவ எதிர்ப்பில் இருந்து கிளம்பியதுதான் பெண்ணின் அன்றைய இருப்பு கிளப்பிய சிந்தனைகளும் அதில் விளைந்த எதிர் மனோ நிலைகளும் பாரதியின் கவிதைகளில் பெண் பற்றிய அன்றைய இருப்பின் மாற்றுக் குரலாக ஒலித்தது.

பெண் வீட்டை விட்டு வெளியேற முடியா கல்வி கற்ற இயலா அடிமை வாழ்வுக்கெதிரான குரலாகவே

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"

என்பதுவுமான கும்மிப் பாடல்கள் முழுக்க எதிரொலித்தது.அவருக்கு பிறகு பாடிய பாரதி தாசன் கூட பெண்ணை ஒரு குடும்பத்துக்கானவளாக குறுக்கி விட்ட போதும் அவருக்கு முந்தைய காலகட்டத்திருந்து கொண்டு

"பெண் விடுதலை யென்றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றிகேளீர்
மண்ணுக்குள் ளெவ்வுயிருந் தெய்வமென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதி கேட்டீரே!
விண்ணுக்கு பறப்பதுபோற் கதைகள் சொல்வீர்
விடுதலையென்பீர் கருணை வெள்ளமென்பீர்
பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை
என்றும்
ஐம்பூதக்களும் சிவனுக்கானதாய் பாடியதிலிருந்து விடுபட்டு
"பூதமனைத்தும் ஆனாய் காளி" என்று , பெண்ணை ஐம்பூதத்துக்குமானவளாய் பாடியதிலிருந்தும்
தாய் மாண்பு எனும் கவிதையில்
பெண்ணாட்டி தனையடிமை படுத்த வேண்டிப்
பெண் குலத்தை முழ்தடிமை படுத்தலாமா?
.........................................................................
பெண்ணடிமையுற்றால்
மக்களில்லாமடிமையுறல் வியப் பொன்றாமோ?
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராமென்பான்
நாட்டினிலே...........

எனக் கேள்வி எழுப்பி பெண்ணடிமைத்தனம், நாட்டு அடிமைத்தனத்துக்கும் ஆன வித்தாய் மாரிவிடும் என எச்சரிக்கும் பாரதியின் கவிதை வரிகள் அவரது விடுதலைத் தேடலில் பெண்ணையும் கொண்டு வந்து வைத்து விடுகின்றது.
காலம் காலமாய் கொடுப்பவளாய் சாந்த சொரூபியாய் , மகாலட்சுமி என சொல்லப் பட்ட பெண்ணிணத்தை
ஆண்மை வழங்குவதும் அவளே என்றும்,
உக்ர வடிவாய் சொல்லப் பட்டு நிராகரிக்கப் பட்ட அல்லது அச்சம் தரும் வடிவை
"அன்பளித்து விட்டாய் காளி
ஆண்மை தந்து விட்டாய் " என்றும்

"மானம் வீரிய மாண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்"

"ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
என்றும் காளியை நேசத்துக் குரியவளாய் தூக்கிப் பிடித்தது மறுப்புக்குரல் தானே. ,மேலும் பெண்ணுக்கான படிமத்தை பிரட்டிப் போட்ட வித்தையை " கட்டுடைப்பு , பின்னவீனத்துவம் எனும் சொல்லாடல்கள் வாராத காலத்திலிருந்தே செய்தவன் பாரதி

"மையுறு வாள் விழியாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்க முற்றிருந்தாரே"

மண் பொன், பெண் விலக்க வேண்டியதாய் சொல்லிய விழுமியங்களுக்கிடையிருந்து பெண்ணையும் பொன்னையும் மண்ணெனக் கொண்டு உடமை யாக்கத் துடிக்கும் ஆதிக்க நிலையிருப்பதை அப்பாடல் நம் கவனத்திற்கு எடுத்து வருகின்றது
. நிலவுடமை கால கட்டத்திற்கு பிறகு தான் பெண்ணும் உடைமைப் பொருளாய் பார்க்கப் பட்டு ஆணுக்குள் அடைபடத் துவங்குகின்றாள்.அவள் உடமைப் பொருளா எனக் கேள்வி வாசிப்பவனை கேட்க வைக்கும் கவிதை வரிகள் இவை

மிக இயல்பாக கேள்வி பதில் தொனியில் அமைந்திருக்கும் அழகுத் தெய்வம் என்ற கவிதையில் வழமையாக நமை ஆசரியப் படுத்தும் பாரதியின் சிந்தனை வெளியை மெச்சிய படியே கடந்து விடுகின்றோம்.ஆனால் அதையும் தாண்டி உரையாடுபவர்களை உற்று நோக்க அறியாமையில் கேள்வி கேட்பவன் ஆணாகவும், பெண் ஆளுமையோடு பதில் சொல்வதாக இருப்பதுவும் பெண்ணை அறிவின் வெளிப்பாடாக பார்க்கிறது அழகு எனச் சொல்லாமல் சொல்லிப் போகும் பாடலாக அமைகின்றது

"காலத்தின் விதி மதியைக் கடந்திடுமா? என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலெ ஒன்றிரண்டு பலித்திடலாமென்றாள்
...................
மூலத்தை சொல்லவோ வெண்டாமோ? என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்


கற்பை பொதுவில் வைப்போம் என்று உரத்து சொன்னதோடல்லாமல்,கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் என்று பேசி வந்த காலத்திற்கிடையில், கற்பு தவறுகின்ற பெண்களாலேயே உலகம் சீரழிகின்றது எனப் பேசி வந்த சமூகத்திற்கிடையே , பெண் கற்பு நெறி தவறுவதற்கு ஆண் கற்பு நெறி தவறுவதும் தான் காரணம் என்று ஒழுக்கத்தை இருபாலாருக்கும் பொதுவில் வைத்தவன் பாரதி
ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ
.......................................
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்து
கற்பு கற்பு என்று கதைக்கின்றாரே -விடுதலைக் காதல்

கவிதையில் அவரது சிந்த னை சவுக்கடிகளாய் சமுகத்தின் மீது சாடுகின்றது

இப்படியாக விடுதலை உணர்வை அடிமை மனோபாவத்திற்கெதிரான மாற்றுக் குரலாக உணர்வுகள் சிதைபடுவதைக் கண்ட பொழுதெல்லாம் உணர்வுகள் சிதைபடுவதை மறுத்து வாழ்ந்த மானிடர்க்கெல்லாம் அது ஒடுக்கப் பட்டோராக இருந்தாலும் , பெண் மக்களாக இருந்தாலும் கண்ட ஒவ்வொரு தருணத்திலும் அவர்களுக்கு தன் எழுத்தின் சிந்தனை வழி தொடர்ந்து உணர்த்தப் புகுந்தவன் பாரதி.

இன்றைக்கு பெண்ணினத்திற்க்காகப் பேசப் பரிந்து வரும் இலக்கிய வாதிகளும் இலக்கியமும் தன் கையைக் கொண்டே பெண் கண்ணைக் குத்தும் வேலையை மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் நம்முன்னே எழும்புகின்ற பெரிய கேள்வி பாரதி இச்சமூகம் வழி வழியாக மரபணுவிலும் ஊடாகத் தந்த ஆணாதிக்க மனோநிலையை கடந்தேகினானா? என்பது அவன் எந்த வித ஆதிக்க மனோநிலையையும் தன்னிலிருந்து அகற்றி வென்றிருந்தான். அதை விட ஆதிக்க மனோநிலை தன்னிலிருந்ததை ஒரு பெண்ணே நிவேதிதா தேவி அடையாளமிட்டு காண்பித்த போது உண்மையை ஒத்துக் கொள்ளும் திட சிந்தனையும், அதை பகிரங்கப் படுத்தும் உண்மையும் கொண்டிருந்தவன். பெண் துணையோடு அவளின் மனித இருப்பை உணர்ந்து விட்ட தருணத்தை உரத்து வெளிப்படுத்தி கடந்தேகியவன்.

எனவே அவனது நாட்டு விடுதலைத் தேடலிலும் பெண் விடுதலை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி இருந்தது . இன்னும் சொல்வதற்கு ஆயிரக் கணக்கில் அவன் கவிதைகள் சான்றுகள் தந்த வண்ணம் இருக்கிறது. அதை முற்றும் உணர்ந்த வாசிப்பு நம்மிடம் மிக குறைவாகவே இருக்கின்றது.

பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்கு காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா

Sunday, February 26, 2012

சுப்பிரமணிய பாரதி


சுப்பிரமணிய பாரதியார் 1882-1921
வேறு பெயர்(கள்): பாரதியார்
பிறப்பு: திசம்பர் 11, 1882
பிறந்த இடம்: எட்டயபுரம், மதராஸ், இந்தியா
இறப்பு: செப்டம்பர் 11 1921 (அகவை 38)
இறந்த இடம்: மதராஸ், இந்தியா
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
பொருளடக்கம்
[மறை]

1 வாழ்க்கைக் குறிப்பு
2 இலக்கியப் பணி
3 பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
4 தேசியக் கவி
5 புதுக்கவிதைப் புலவன்
6 பெண்ணுரிமைப் போராளி
7 பாஞ்சாலி சபதம்
8 பாரதியார் நினைவுச் சின்னங்கள்
9 இவற்றையும் காண்க
10 வெளி இணைப்புகள்

வாழ்க்கைக் குறிப்பு

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், (Thirunelveli) பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’

புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்
இலக்கியப் பணி

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுனைந்த கவிஞாயிறு. சமஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

குயில் பாட்டு
கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
பாஞ்சாலி சபதம்

ஆகியன அவர் படைப்புகளில் சில.
பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
[தொகு] தேசியக் கவி

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
புதுக்கவிதைப் புலவன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவர்.
பெண்ணுரிமைப் போராளி

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினார். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.
பாஞ்சாலி சபதம்

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாரதியார் நினைவுச் சின்னங்கள்

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!