Thursday, January 17, 2013

சிந்தனை கதைகள்

மரங்கொத்திப் பறவை


சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.  அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.


தத்தளித்த எறும்பும் காப்பாற்றிய புறாவும்


ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.


எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது

மற்றொரு நாள்.

ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.

ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.

விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.

கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும் ன்றி சொன்னது

அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.


உண்மையான அன்பும் கூட ஒரு விதமான பக்தி தான்


மூன்று நண்பர்கள் காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள் . திடீரென ஒரு புலி வந்துவிட்டது.  ஒருவன் சொன்னான் "இன்றோடு நம் கதை முடிந்துவிடும்" என்று...! இரண்டாமவன் "நாம் ஏன் சாகவேண்டும் வாருங்கள் பகவானிடம் பிரார்த்தனை செய்வோம்" என்றான்.





மூன்றாமவன் சொன்னான் நாம் ஏன் பகவானை கஷ்டபடுத்த வேண்டும், வாருங்க மரத்தின் மீது ஏறிகொள்வோம்" என்றான்.

"இன்றோடு செத்தோம்" என்று சொன்னவனுக்கு, பகவான் இருக்கிறார் அவர் நம்மை காப்பாற்றுவார் என்ற உண்மையை அறியவில்லை.

வாருங்கள் "பகவானிடம் பிரார்தனை செய்வோம்" என்று சொன்னவன் ஞானி. பகவான் தான் படைத்தல் காத்தல் அழித்தல் எல்லாம் என்ற உணர்வு இருந்தது.

நாம் ஏன் "பகவானை கஷ்டபடுத்த வேண்டும்" என்று சொன்னவன் இருக்கிறானே..! அவனுடைய உள்ளத்தில் தான் பிரேமை உதித்திருந்தது. அன்பு தோன்றி இருந்தது.

தன்னை பெரியவனாகவும், தன் அன்புக்கு உரியவனை சிறியவனாக கருதுவது பிரேம பக்தியின் இயல்பு . தான் "நேசிப்பவனுக்கு கஷ்டம் கூடாது" என்று எச்சரிக்கையுடன் பார்த்துகொள்ளும் இயல்பு அது.

தான் அன்பு செலுத்துபவனுக்கு ஒரு "சிறு துன்பம் கூட நேர்ந்துவிடக்கூடாது" என்று கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது அவனது விருப்பம்.

உண்மையான அன்பும் கூட ஒரு விதமான பக்தியின் அடையாளம் தான்.


தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.


ஒரு நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமாக முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது தப்பிக்க முயல்கையில் உடம்பெல்லாம் காயம், கீறல்,   முள்செடியைப் பார்த்து, “என்ன செடி நீ! பார், உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா ?” என்று திட்டியது.

முள்செடி அதற்கு, “ நண்பா! நான் முள்செடி., எனக்கு குத்துவதைத் தவிர எதற்கும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை” என்றது.

நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.


இலவச சந்தோஷம் உயிரை வாங்கிவிடும்.


தேனீக்கள் மலருக்கு மலர் சென்று தேன் சேகரிப்பதை சில ஈக்கள் பார்த்தன. எதற்கு இத்தனை கஷ்டம். ஒரு வீட்டில் அலமாரியில் தேன் பாட்டில் வைத்து இருந்தார்கள். அது சரியும் நிலையில் இருந்ததை  . ஈக்கள் பார்த்து விட்டன . காத்திருந்து, அது சரிந்ததும் மாற்றி மாற்றிக் குடிக்கலாம் என்று நினைத்தது.

அவைகள் எதிர்பார்த்தபடியே தேன் பாட்டில் சரிந்து  தரையெல்லாம் தேன்.  ஈக்கள் உற்சாகத்துடன் மொய்த்துத் தேனைத் தத்தம் சின்ன நாக்குகளால் பருகின, திருப்தியாகத் தேன் குடித்ததும் பறந்து போக முயற்சித்த போது இறக்கையெல்லாம் தேன் ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் தேனிலேயே மாட்டி இறந்துவிட்டன.

நீதி : இலவச சந்தோஷம் உயிரை வாங்கிவிடும்.


சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் - வக்கீல்கள் மட்டுமே.


ஒரு குடும்பதலைவர் இறந்தபோது கண்ணீர் விட்டழுதனர் உறவினர். அனைவரும் அவர் சொத்துக்கு ஆசைப்பட்டு வழக்கு தொடர்ந்தார்கள் பல வருஷங்கள் இழுத்தடித்த பின், அவர்களில் ஒருவருக்கு சாதகமாகத் தீர்ப்பாயிற்று. வென்றவர் தன் வக்கீலை அழைத்து, “சொத்தை மதிப்பிடுங்கள்” என்றார்.

வக்கீல் தனது கடைசி தவணையை வாங்கிக்கொண்டு, “மதிப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை” என்றார்

பின், வழக்கு தொடர்ந்ததால் எனக்கு என்ன பயன்?” என்றார் வென்றவர்.

அய்யா! நீங்கள் என் மிக முக்கியமான கட்சிக்காரர். ஆனால், உங்களுக்கு வழக்கு போட்டு சொத்து பெறுவதில், எந்த லாபமுமில்லை என்கிற ஆதார உண்மை கூடத் தெரியவில்லையே! என்று ஆச்சரியப்ப்டுகிறேன்” என்றார்.

நீதி:* சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் இரு கட்சி வக்கீல்கள் மட்டுமே.*

தயவு செய்து நாமக்கல்லில் ஒரு வக்கீல் இருக்கிறார் மோ****ஸ் என்று - அவரிடம் எதுக்கும் செல்லாதீர்கள் - வழக்கில் வெற்றி கண்டாலும் உங்கள் கை காசு கொடுத்து வரவேண்டி இருக்கும்


உயிர் காக்கும் தந்திரம்


நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.


முள்ளம் பன்றியும் ஓநாய்யும்


தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".


சுஜாதா - நீதிக் கதைகள் - கழுகு


ஒரு கழுகு சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருந்தது. விஷ் என்ற சப்தம் கேட்டு அது என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு அம்பு அதைத் தாக்க, அடிபட்டு தன் இறக்கை இழந்து சுழன்று சுழன்று சொத்தென்று கீழே விழுவதற்கு முன் தன்னைத் தைத்த அம்பை ஒரு தடவை பார்த்தது. கூர்மையான முனை, நீண்ட உடல், அதன் வாலில் கழுகிறகு! ‘அடப்பாவமே!’ என்று சொல்லிகொண்டே செத்துப்போனது.

நீதி : பல தடவை நம் எதிரிகளுக்கு நம்மை அழிக்க நாமே உதவி செய்து தருகிறோம்.


-புதிய நீதிக் கதைகள் புத்தகத்தில் சுஜாதா


நீதிக் கதைகள்


ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

”ஏன் கழுதாய்?”

”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது.


நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே!


உயிர் காக்கும் தந்திரம்


நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

2 comments:

  1. மேலும் நீதிக்கதைகள் குழந்தைகளுக்கான சிந்தனை கதைகள் இங்கே காணலாம்

    http://tamilarivukadhaikal.blogspot.in/

    ReplyDelete

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!