Thursday, February 13, 2014

சுப்பிரமணிய பாரதி


 

 இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.இவர் வாழ்ந்தகாலம் 11 திசம்பர்1882 தொடக்கம் 11 செப்டம்பர் 1921வரையாகும்.அக்காலத்தில் தமிழகத்தில் பெண்ணுரிமை பற்றி பேசிய முதல் ஆள் இவராகத்தான் இருக்கமுடியும் என பல நூல்களில் எழுதப்பட்டுள்ளது,அது மட்டுமல்லாமல் இவரின் இருபத்தி மூன்று படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதே நேரத்தில் சுப்பிரமணிய பாரதி இந்திய விடுதலைக்கா மிக வலிமையாக போரிட்டவர் ,போராட்ட காலத்தில் பல விடுதலை போராட்ட கவிதைகளையும்,பாட்டுக்களையும் இயற்றியவர். இவர் தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர்.இதன் காரணமாக இன்றும் இவரது படைப்புகளுக்கு தனிமரியாதையும் உண்டு.
சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையானது நினைத்துப்பார்க்க முடியாதளவு மிக மிக வறுமையானது. எப்படி இருந்தும் தமிழ் தாய்க்கு வார்த்தையால் சொல்லமுடியாதளவுக்கு தனது வாழ் நாளையே அர்பனித்து சேவைசெய்தவர்.

சுப்பிரமணிய பாரதியின் சிந்தனைகள் ...

·                      

o                  மற்றவர்களின் உள்ளத்தில் உங்களைப் பற்றிய பொய்யான மதிப்பை உண்டாக்க முயற்சிக்காதீர்கள்.இதனால் பல இடங்களில் அவமானப்படலாம்.

o                   கேட்டவுடன் உலகில் எதுவும் கிடைப்பதில்லை. பக்திக்கும் இது பொருந்தும். பக்குவமடைந்த பிறகே கேட்ட வரம் கிடைக்கும். இதற்கு பல காலம் பொறுக்கவேண்டும்

o                  பக்தி அதிகரிக்க அதிகரிக்க மனோபலம் அதிகரிக்கும். அப்படிப்பட்டவன் இந்த பிறப்பிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுவான். கலி உலகக் கோட்பாடு

o                  வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச்சிகரத்திற்குச் சென்று குகையில் அமர்ந்து தவம் செய்தாலும் கடவுள் தரிசனத்தைப் பெற முடியாது.

o                  தனிமையை விரும்பியோ, மந்திரம் ஜெபித்தோ, யோகபயிற்சியில் ஈடுபட்டோ உலகத்தை விட்டு விலக முயற்சிக்க வேண்டாம். உலக விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே மனதை ஒருநிலைப் படுத்துவதே பயனுடைய செயல்.

o                  துன்பம் நேரும்போது துணிச்சல் என்னும் கடிவாளத்தால் கட்டி மனக்குதிரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே சரியான யோகப்பயிற்சி.

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!