Tuesday, June 18, 2013

அ.செ. முருகானந்தன் எழுதிய
'புகையில் தெரிந்த முகம்' எனும் நாவிலிருந்து (1950)


அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாளிரவு. செகசோதியான நிலவு காயும் காலம். யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற பிரதேசத்தை பகல் வேளையில் தகிக்கும் வெய்யில் அக்கினிக் குண்டமாகவே மாற்றிவிடும். வளர்பிறை காலத்து இரவுகளிலோ நிலைமை எதிர்மாறாகவிருக்கும். வெண்மனற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமிர்த கிரணங்களை வாரி இறைத்து அதை ஒரே குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப் போல பரந்து கிடக்கும் ஒரே மணல்வெளி. அந்த வெளியை இரண்டாகப் பிளந்துசெல்லும் தெரு வீதி வழியே நிலாக் காலத்தில் மாட்டுவண்டி பிரயாணம் செண்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப் பொருத்தம் என்று சொல்ல வேண்டும், வருஷம் முந்நூற்றி அனுபத்தைந்து நாளும், மண்கிண்டி, தண்­ர் இறைத்து, களைபிடுங்கி அலுத்துப் போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும் ஆறுதலுக்கும் ஏற்ற ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகிலும் பூமியைத் தோய்க்கும் பால் போன்ற வெண்ணிலவு. வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவைகளைக் கடந்து போய்க் கோயிலை அமைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் வெண்மணல் திட்டியும் பால் நிலவும் தென்றற காற்றும்தான். கூட, கோயிலிலிருந்து நாதசுரம் இன்னிசையைப் பிழிந்து மிதந்துவரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். மனித உள்ளத்தின் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்?


அ. மரியதாசன் எழுதிய
'பனைநாடு அல்லது பிளந்த உலகம்'
என்னும் நூலிலிருந்து (1953)

காலை ஆகிறது. வானிடை முகில் ஒன்றும் இல்லை. செஞ்ஞாயிறு குண கடலினின்று பரிதியாய்க் கிளம்புகின்றது. பெவளத்தில் அங்கொன்று இங்கொன்றாய் மிதந்து செல்வன யாவை?

அஃதோர் ஆவின் பிணம்! இஃதோர் ஆட்டின் உடல்! முகம் வானம் பார்த்தாற்போல் செல்வது ஓர் அரிவையின் பிரேதம்! குப்புற மிதந்து துவள்வது ஓர் ஆடவனின் உயிர் நீங்கிய யாக்கை!

மிதக்கின்ற பனை, தென்னைகளுக்கு ஒரு கணக்கே இல்லை. ஆனாற் சில பனைகளின் முடிகளே தென்படுகின்றன. இவை மிக உயர்ந்தனவும் இன்னும் நிலம் பெயராதனவுமாய் இருத்தல் கூடும்.


வே. தில்லைநாதன் எழுதிய
'அனிச்சமரின் காதல்' எனும் நாவலிலிருந்து (1953)

அளிச்சம்....அன்றையத் தினமிருந்த அழகை எளிதில் விவரிக்க முடீயாததாயிருந்தது. நீண்ட வடம்போல் பின்னித் தொடை வரைக்குந் தூங்கிய கூந்தலும் சிறந்த நெற்றியும் அகண்ட வாள்போல் கண்களும் மெத்தென்னும் மாந்தளிர் மேனியும் முத்துப்போல் பற்களும் அன்ன நடையும் காதில் கண்ணைக் கூசும்படி ஜொலிக்கும் வைரத் தோடும் மார்பில் முத்து வடமும் உடையவளாய் வந்து சபையின் கண் இருந்தனள். அத் தருணம் வந்த மகான்களில் அயல் கிராமத்தில் நீதவானாயிருக்கும் ஒரு வாலிபரும் வந்தார். அவர் ஆடவர்களில் மன்மதன் போல் பார்க்கிறவர்கட்கெல்லாம் கண்ணைத் தைக்கும்படியாய் இருந்தார். பொன்னிற மேனியும் கருமையான தலைமயிரும் அகண்ட நெற்றியும் பார்க்கிறவர்களை ஊடுருவிச் செல்லத்தக்க கண்களும் சிறந்த அலங்காரமான முகமுடையவராய் அனிச்சமலருக்கு அருகாமையில் அமர்ந்திருந்தார்.


பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய

'வாழ்க்கையின் வினோதங்கள்'
என்னும் நாவலிலிருந்து (1954)


ஒரு நாள் கொம்பனித் தெருவிலுள்ள வறிய வீடொன்றிற்கு நான் போனேன்... அத் தெருவுக்கு அன்றுதான் முதன் முறை போனோம். அங்கு போனதும் அத் தெரு இருந்த நிலையைக் கண்டு விறைத்துப் போனேன. அத் தெருவைப் பற்றிக் குற்றமாய் கூற எனக்கு விருப்பமில்லை. அங்குள்ள வீடுகள் மிகப்பழுதான நிலையில் இருந்தன. சில மாதங்களில் அவற்றை நகரசபையார் இடித்துவிடத் தீர்மானித்திருந்தனர். அங்கு காற்றோட்டமில்லை. சூரிய வெளிச்சத்தைத் கனவிலும் காணமுடியாது. அத் தெரு இருந்த பகுதி கொழும்புக் கோட்டைக்கு அணித்தாயிருந்த போதிலும் கொழும்பு கோட்டைக்கு அணித்தாயிருந்த போதிலும் கொழும்பு நகரவாசிகள் அதைச் சிறிதேனும் அறியார். அத் -ருவுக்குத் தார் போட்டிருந்ததோ என்னவோ எனக்கு நினைப்பில்லை. ஆனால் அங்கு வைக்கோற் துண்டுகளும் பலவகையான அழுக்குப் பொருள்களும் நிறைந்து நிலத்தை மறைத்தன. தெருவே வாழிடமாகக் கொண்ட வறிய சிறு குழந்தைகள் அங்குள்ள சேற்றிலே உருண்டு விளையாடித் திரிந்தனர். வலது பக்கமும் இடது பக்கமும் வீடுகள் நிறைந்திருந்தன. அவை யாவும் உயர்ந்து அழுக்குப் படிந்து கிடந்தன. அவ் வீடுகளின் சாளரங்கள் திரைச் சீலைகளை ஒருபோதும் கண்டறியா. திரைச் சீலைகளுக்குப் பதிலாக அவை ஒவ்வொன்றிலும் கிழிந்த கந்தைகள் தொங்கின. அக் கந்தைகள் யாவும் எப்போது அங்கு காற்று ஒரு சிறிதாவது வந்து தம்மைக் காய வைக்குமோ என்று பொறுமையோடு காத்துக்கொண்டிருந்தன.


கே.வி.எஸ். வாஸ் எழுதிய
'குத்தாளப் பிரேமா'விலிருந்து (1951)

இந்த விளம்பர யுகத்தில் கம்பனும் காளிதாசனும், மறு ஜென்மமெடுத்து வந்தால்கூட ஓரளவு விளம்பர மில்லாவிட்டடால் உலகம் அவர்களை மகாகவிகளென்று அங்கீகரிக்காதென்று ரமணி அடிக்கடி சொல்லுவான். "தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்களேன்! இன்றும் நம்மிடையில் எவ்வளவு மகாகவிகள் இருக்கிறார்கள். எவ்வளவு அற்புதமான கவிதா மாலைகளைப் புனைந்து தமிழ் மொழியை வளம்பெறச் செய்கிறார்கள்! அவர்களை நீங்களும் நானும் பெரிய கவிஞர்களென்று சொல்லிவிட்டால் உலகம் ஒப்புக்கொண்டுவிடுமா? அவர்கள் செத்துச் சாம்பலான பிறகு ஏதோ ஓரிரண்டு பத்திரிகைகள் அவர்களது பழைய கவிதைகளை ரசித்துவிட்டுப் புளுகுகின்றன. உடனே ஓரேயடியாக மற்றப் பத்திரிகைகளும் இந்திரன் சந்திரன் என்று வானளாவிப் புகழ்கின்றன. பிறகு மாண்ட கவிகளுக்கு ஞாபகச் சின்னமாக மண்டபம் கட்டுவோமா, ஸ்தூபி நிறுத்துவோமா என்று கூட்டம் போட்டுக் கூடி யோசிக்கிறார்கள். இந்த அளவு அந்தக் கவிஞன் உயிருடன் இருக்கும் பொழுதே ஏற்படுவது தானே? வறுமையில் வயிற்றைச் சுருக்கிக் குடிக்கக் கூழுமில்லாமல் செத்து மடிகிறான் தற்காலக் கவிஞன். அவனைப் ஆதரிக்க ஆளில்லை. இதை எதற்குச் சொல்லுகிறேன்றால் இன்று கன்னா பின்னா என்று ஏதோ எழுதித் தள்ளும் அரை குறைப் பேர்வழிகளைக் கூட விளம்பரம் என்ற மகா சக்தி மேதையாக்கி விடுகிறது. விளம்பரம் தான் இன்றைய வர்த்தகத்தின் உயிர் நாட...." என்று ரமணி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்வான்.


எம்.ஏ.அப்பாஸ் எழுதிய
'இவனைப் பார்' நாவலிலிருந்து (1953)

நாளை திருமணம்!- அப்படி நினைத்துக் கொண்டு தான் வந்தார் சலீம். பூட்டிக் கிடந்த கதவைத் தட்டினார். ஆம், வைராக்கிய மென்னும் பூட்டால் பூட்டப்பட்டிருந்த என் இதயக் கதவிலும் தான் அந்தத் தட்டு மோதியது! குதித்தோடிப் போய்க் கதவைத் திறக்கத் துடித்தன காதலும் கையும்! சிறிது நேரம் சிரமப் பட்டு, உணர்ச்சிகளையெல்லாம் அடக்கிக் கொண்டு மெதுவாகச்சென்று கதவைத் திறந்து விட்டு விர்ரென்று ஓடி வந்து கட்டிலில் விழுந்து விம்மி விம்மி அழுதேன். விஷயம் விளங்காமல் விழித்தார். என்னை அள்ளியெடுத்தார். அன்பொழுகப் பேசினார். அரும்பாடுபட்டு என் கரும்பு மனத்தை இரும்பாக நான் மாற்றிக் கொண்டதை அவர் எப்படி அறிவார்? புழுவாகத் துடித்தார். கேள்விகளை அடுக்கினார் முடுக்கினார். அவருடைய நிலை பார்ப்பதற்கே பரிதமாக இருந்தது. அப்படியே கட்டித் தழுவி எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டு மென்று மனம் துடித்தது. கண்களைத் திறந்தேன். ஆ! அந்தத் துர்ப்பாக்கியத் தாயின் சோகச் சித்திரம் தோன்றி என்னை எச்சரித்தது. அன்பும் தியாகமும் காதலும் கடமையும் குமுறித் கொந்தளிக்கும் உள்ளத்தோடு போராடிக் கொண்டே, போட்டு உடைத்தேன் அந்த அணுகுண்டை!

"தேவன்-யாழ்ப்பாணம்" எழுதிய
"கேட்டதும் நடந்ததும்" நாவலிலிருந்து (1956)

இப்படி எத்தனையோ நினைவுகள். அழியாத நல் இன்பமூட்டும் நினைவுகள். சோலைவாய் வாழ்வை ஆக்கியவை அவை தாம். நிறைவை உண்டு பண்ணியதும் அவை தாம். ஆனால் துன்பந்தந்து துடிக்கச் செய்வதும் அவை தான். கொல்லுவதும் அதே நினைவுகள். செழிக்கச் செய்வதும் அதே நினைவுகள். இத்தனையும் என்னைப் புது மனிதனாக்கி விட்டன. வகுப்பில் மட்டுமென்ன, பார்த்த இடமெல்லாம் அழகைக் கண்டேன். இன்பத்தைக் கண்டேன். ஒரு கவிஞன், அழகு எங்கெல்லாமிருக்கிறதோ அங்கெல்லாம் தேடித் திரிந்து கண்டு பிடித்து ஆராதிக்கிறேன், அனுபவிக்கிறேன் என்று பாடியிருக்கிறான். ஆனால் எனக்குத் தேடித் திரிய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. பார்க்குமிடங்களெல்லாம் 'நந்தலாலா, உன்றன் பச்சை நிறந்தோன்றுதையே நந்தலாலா' தான்.


ஹமீதா பானு எழுதிய
"சதியில் சிக்கிய சலீமா"விலிருந்து

"சரி அம்மா! நான் படுத்துக் கொள்ளுகிறேன். நீ போய்த் தூங்கு" என்று தாயாரை அனுப்பி விட்டுச் சலீமா படுத்துக் கொண்டாள். தான் கண்ட கனவு நனவாகுமா என்பதிலேயே கவலை கொண்டு கருத்தைச் செலுத்திக் கொண்டு புரண்டு புரண்டு கிடந்தாள்.

காகம் கரைந்தது, கருமை வெளுத்தது. கண் விழித்துக் கனவேகத்தில் காலைக் கடன்களை முடித்து விட்டாள் சலீமா. வயிற்றிலே வளர்ந்து வரும் சிசுவின் வரப்பிரசாதமான குமட்டல், வாந்தி, மயக்கம் இவைகளும் கூடவே கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தன. அவைகளையெல்லாம் அவ்வப்பொழுது சந்தர்ப்பத்திற் கேற்ப மழுப்பி மறைத்து மந்திர ஜாம் செய்து கொண்டாள். அவளது வெள்ளையுள்ளத்தைப் போன்ற வெண்ணிற ஒளி பரப்பி சூரியனும் வெளிக்கிளம்பி வந்து கொண்டிருந்தான்.


காயல் தாஹ’ர் எழுதிய
"சிந்தித்துப் பார்" நூலிலிருந்து (1954)

சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் 'டங்....டங்' கென்று ஆறுமுறை அடித்தது. கதிரவனின் பொற் கதிர்கள் கீழ் வானத்திலே தெரிந்து. பின் சற்று நேரத்திலே அக் கதிர்கள் பச்சைக் கம்பளம்போல் படர்ந்திருந்த பசும் புல்லின் மேட்பட்டு, அதில் ஒட்டிக்கொண்டிருந்த பனித்துளிகளை வெண்முத்துக்களாக்கின. ஆதவன் வரவைக்கண்டு 'தன் பகைவன் வந்து விட்டான். இனி நமக்கு மதிப்பில்லை' என்றெண்ணிய இருள் மெள்ள மறைந்தோடியது. காதலனைக் கண்ட அல்லிமலர் ஆனந்தத்தால் தன்னிதழ்களை விரித்தது. மற்ற மலர்களம் தங்கள் இதழ்களை விரித்தது, வண்டுகளை வா வா என்றழைப்பது போலிருந்தது. பறவை இனங்கள் இனிமையாகப் பாடிக்கொண்டு இறைவனைத் தொழுதன.

வியாசக விதரணன் எஸ்.முத்தையா எழுதிய
'நாகரிக நிர்மலா அல்லது மலைக்குறத்தி மகள்' நூலிலிருந்து (1955)

அவள் மனமே பரவசமடைந்து "என்ன ஆனந்தம்! என்ன அழகு ! காதல் என்பதும் இதுதானா? காதல் லீலை என்பதும் இதுதானா?" என்ற சொற்கள் அவளை அறியாமலே வெளியாகின்றது. பக்கத்தில் படுத்திருந்த நூர்ஜா திடுக்கிட்டெழுந்து உட்காந்தாள். நிர்மலா, நிர்மலா என்று கூப்பிட்டும் பார்த்தாள். சத்தமில்லை, அதே சமயம் நிர்மலாவின் வாயிலிருந்து சந்தனக்குமார் சொன்ன:

"யாமினி அரா மின்னாக் கலவி, கற்றவர் ஞைஞை
மனன மாறி தராக் கிரகி, மறுதலைப் பாவை வாழ் பாழ்"

என்றது வெளியானது. லைலாவும் அதை இரண்டு மூன்று தரம் பாடமாக்கிக்கொண்டாள்.

மு.வே.பெ.சாமி எழுதிய
"யார் கொலைகாரன்?" நாவலிலிருந்து (1954)

ஏழை என்றால் இன்பமாளிகைக்குப் பணக்காரன் ஏறிச் செல்லும் ஏணி என்றுதானே பொருள். அந்த ஏழைக்குப் பசி என்றால் அவர்களுக்குப் பன்னீர் இறைத்ததைப்போல, அவன் பட்டினி என்றால் பரவச மடைவார்கள். மரணம் என்றால் மனிதனுக்கு நியமிக்கப்பட்ட நித்திய ஜ“வயாத்திரைஎன நீட்டோலை வாசிப்பார்கள். சிந்தும் கண்­ர் அவர்களின் தேள் கொட்டிய கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிக்கும். பாட்டாளி என்றால் காலடியில் வீழ்ந்துறங்கும் நாய்கள் என வரட்டு வேதாந்தம் பேசுவார்கள்.

இ.தொ ETNV003.MTF



எம்.பீ.எம். முகம்மதுக் காசீம் எழுதிய
'கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு' நூலிலிருந்து (1955)

குனிந்த முதுகு நிமிராமல் மூட்டை சுமக்கும் பாரத இந்தியா ஈன்ற பாரத இந்தியா ஈன்ற பாக்கியங்களைப் பார் பார்! அவர்களல்லவா இலங்கை மாதாவாகிய என்னைப் பல வகையாலும் சிறப்பித்துச் சீர்படுத்திச் சிலோன் என்று ஒரு நாமத்தடுன் உலகமெல்லாம் புகழடையச் செய்தார்கள். கீழ்த்திசையின் முத்தென்று பேர்வந்தது எனக்கு, இந்திய மக்கள் செய்த அழியாத அலங்காரச் சேவையாலென்றால் அது மிகையாகாது மகனே! எனக்கு எத்தனை பெயர் கவனி. பவளத்தீவு, நாகதீபம், இலங்காபுரி, சேரந்தீவு, சீலோன் இப்படிப் பல பவிசுப் பெயர்கள் வரக் காரணம் இந்தியன் இயற்றிய சிங்காரச் சேவையின் சிறப்பு. அவர்களை இந் நாட்டை விட்டு நீங்களகற்றினால் நாலேமாதத்தில் நானும் என்னுடைய நாசூக்கான அழகும் நலிந்து போய்விடும்; சந்தேகமில்லை.


வி.லோகநாதன் எழுதிய
'பிரேமாஞ்சலி'யிலிலிருந்து (1954)

என்னைப் பொறுத்த வரையில் காதலை வாழ்வுக்கு அடுத்தபடியாகவே வைக்க விரும்புகிறேன். யோசித்துப் பார்த்தால் காதல் வாழ்க்கையாகாது. வாழ்க்கை இல்லாவிட்டால் காதல் ஏது? ஆனால், காதலுக்கோ வாழ்வு முழுவதையும் தின்னும் சக்தி உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான் காதலைப் பிரதானமாக்கிக் கொள்ளக் கூடாதென்று கூறுகிறேன். வாழ்க்கையைப் பரிமளிக்கக் காதல் அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. காதல் மிகமிக அவசியம்தான். ஆனால், அது வாழ்வில்லை, ஓர் அம்சமாகவே இருக்க வேண்டும். வாழ்வோ பரந்தது. காதலுக்காக இந்த வாழ்வையே பலியிடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம் மாத்திரமன்று; அப்படிப் பலியிடுவது அந்தக் கடவுளுக்குக் கூட அடுக்காதென்றே நினைக்கிறேன். காதலுக்காக வாழ்க்கையை - மகா சிரேஷ்டமான உயிரையே - பலியிடும் காதலர்களைக் காவியங்க• புகழ்ந்துகொண்டேயிருக்கட்டும். அந்தக் காவியக் கற்பனைகளைப் படித்துவிட்டு நாமும் காதலுக்காக வாழ்கையைப் பலியிட வேண்டாம்.


வரதர் எழுதிய
"வாழ்க நீ சங்கிலி மன்ன!" நூலிலிருந்து (1957)

போர்! தினவெடுத்த தோள்களைத் தட்டித் திரண்டெழுந்தனர் தமிழ் வீரர். போர்ப் பறை ஒலித்தது. வீரர்கள் ஆரவாரம் அதைவிடப் பெரிதாய் முழங்கிற்று. வில்லும், வேலும், வாளும், ஈட்டியும் தாங்கிய வீரர் படை அணியணியாகச் சென்று பறங்கியர் பாசறையை நெருங்கிற்று, பறங்கியர் படையும் தயாராக எதிர் வந்தது. அவர்கள் கையிலே துப்பாக்கிகள். ஒருவன் வெடிக்கச் செய்யும் துப்பாக்கிகள், தமிழர் படையிலிருந்து அம்புகளும் நஞ்சூட்டிய ஈட்டிகளும் கவண் கற்களும் சக்கரங்களும் பறந்து பறந்து பறங்கியரைத் தாக்கி வீழ்த்தின. பறங்கியர் துப்பாக்கிச் சூடுகளும் தமிழ் வீரர்களைத் துளைத்தன.


வ.அ. இராசரத்தினம் எழுதிய
'கொழு கொம்பு' நாவலிலிருந்து (1959)

நீண்ட இரவின் மௌனம் அவனுக்கு இன்பமாகவே இருந்தது. மலைநாட்டிலே கொட்டும் மழையும் பனியையும் அவனால் அனுபவிக்க முடிந்தது. வெள்ளிக்கம்பிகளாய் ஒழுகும் மலையருவிகளின் இன்பத்தை அவனால் நுகர முடிந்தது. மாலை மதியத்தின் குளுமையையும் வேனிற் காலத்து வனப்பையும் அவனால் உணர முடிந்தது.

தனிமையின் கொடுமையையும் அதன் பயங்கரத்தையும் மறக்கச் செய்து தன்னை நிலத்திலே நன்றாக வேரூன்றி நிலைக்கச் செய்துவிட்ட புருஷன் என்ற கொம்பிலே அந்தக் கொடியும் செழிப்பாக படர்ந்தது. நாளுக்கொரு முகையும் தளிரும்விட்டு ஆனந்தமாகப் படர்ந்து அக்கொடி தென்றலில் ஆடிற்று. வேனிலில் விகசித்தது. நிலவிலே குளிர்ந்து ஓளிர்ந்தது. காலம் வரும்போது அது பூக்கும், காய்க்கும். தன் இனத்தைப் பெருக்கியே தீர்க்கும்.


தா. சண்முகநாதன் எழுதிய
'கோமதியின் கணவன்' என்ற நாவலிலிருந்து (1959)

இரவில் தாயின் ஒருபக்கத்தில் சோமுவும் மறுபக்கத்தில் சோமுவின் அக்காவும் படுத்துக்கொள்வார்கள். தன் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ளும்படி சோமுவின் அக்கா சொல்லுவார். என் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள் என்று சோமு கூறுவான். சோமுவின் தாயார் இருதலைக் கொள்ளி எறும்பு போலாவார். மகளைச் சமாதானம் செய்துவிட்டு இவன் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்வார். மகளும் அடம் பிடித்தால் இருவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையில் மேலே பார்த்தபடி படுத்துக்கொள்வார்.


எஸ்.பொன்னுத்துரை எழுதிய
'தீ' யிலிலிருந்து (1961)

இனியவையாகத் தோன்றியவையெல்லாம் துன்பச் சாயலில் கருகுகின்றன. மங்கையின் மிருதுவான பட்டுக் கன்னங்களை நினைவுபடுத்திய அந்தி வானம், கூரிய வாளினால் பிளந்தெளியப்பட்ட மூளிமுண்டங்களிலிருந்து பாயும் இரத்தத்தை ஞாபகப்படுத்துகின்றது. வேல்விழி மாதரினி சிங்காரப் போதையூட்டும் நயன சிந்துக்களை மனத்தில் நிறுத்திய விண்மீன்கள், பிணத்தை முழுசாக ஜ“ரணித்த சிதையிலிருந்து வெடித்துக் கிளம்பும் தீப்பொறிகளை ஞாபகப்படுத்துகின்றது. புன்னகை புரள, லளித, அலை நெளிய, தேனூரும் குமரி இதழ்களை நினைவுறுத்தும் குங்குமச் சிமிழி, போர்க்களம் விட்டோடிய கோழையின் முதுகில் ஏற்பட்ட ரண காயத்தின் காயலைக் காட்டுகிறது. வளைந்த செப்பு நாணயத்தைப் போன்ற இமைகளின் உட்பக்கம் குடைந்திருக்கும் சின்னஞ்சிறு குகைக்குள் பயப் பிராந்தியுடன் விழிகள் கடியிருக்க மறுக்கின்றன. சொகுஸான பஞ்சு மெத்தை. நான் படுத்துக்கொண்டதும் தீப்பற்றி எரிகிறது. உணர்ச்சிகள் மரத்துப் போகின்றன. சித்தம் குலைந்த பித்த நிலையில்-லில்லி! (என் லில்லி!); அது என் அழைப்பல்ல. என்னுள்ளிருந்து, என்னில் வேறாக, ஒரு சக்தி அழைப்பது உன் காதில் விழுகிறதா? உன் செவிகள் வானொலிப் பெட்டிகளா? என் தொண்டைக்குள் அஞ்சல் நிலையம் இருக்கிறதா?


இளங்கீரன் எழுதிய
"நீதியே நீ கேள்" நாவலிலிருந்து (1959)

வயிற்றுக்காக - கூலிக்காக - ஏழைகள் பணக்காரர்களிடம் வேலை செய்கிறார்கள். ஆனால், அவர்கள் உயிரை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. மற்றப் பயனெல்லாம் பணக்காரர்களுக்கு- சொத்துக்குரியவர்களுக்குச் சேர்கிறது: அதை அவர்கள் "லாவம்" வருமானம் என்ற பெயரில் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறார்கள். இந்தச் சுரண்டல் முறையிலேயே முழுக்க முழுக்க ஊறிப்போன முதலாளி பரமசிவம் பிள்ளையும் தன் கடைச் சிப்பந்திகளின் விஷயத்தில் இப்படித்தான் நடந்துகொண்டாரென்றால் வல்லி புரத்தை மட்டும் விட்டு வைப்பாரா? வில்லிபுரமும் அவர் குடும்பமும் உயிரை மட்டும் சுமந்துகொண்டு திரிவதற்குத் தேவையான தொண்ணூறு ரூபாவைச் சம்பளமாகக் கொடுத்துவிட்டு, வல்லிபுரத்தின் ஒரே சொத்தான உழைப்புச் சத்தியை நல்லமுறையில் தனக்குப் பயன்படுத்திக்கொண்டார். அதனால், வல்லிபுரத்துக்குப் பிள்ளை குட்டிகள் பெருகியதுபோல வருமானம் பெருகவில்லை. யுத்த காலத்திலே பரமசிவம் பிள்ளைக்கு அடித்த யோகத்தின் நிழழ்கூட வல்லிபுரத்தின் மேல் விழவில்லை. பரமசிவம் பிள்ளை செல்வச் சீமானென்ற அந்தஸ்தை நோக்கி மிக வேகமாக ஓடினார். வல்லிபுரமோ ஒரு அடிகூடப் பெயர்த்து வைக்கவில்லை. நின்ற இடத்திலேயே நின்றான்.


-------------------


அனுபந்தம் .2

1891 முதல் 1962 வரை ஈழத்தில் உருவான தமிழ் நாவல்கள்


வருடம் நூற்பெயர் ஆசிரியர்

1891 ஊசோன் பாலந்தை கதை எஸ். இன்னாசித்தம்பி
1895 மோகனாங்கி த. சரவணமுத்துப்பிள்ளை
1904(?) கலாமதி (?) சுவாமி சரவணமுத்து(?)
1905 வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம் சி.வை. சின்னப்பபிள்ளை
சந்திரகாதன் கதை
1904(?) அழகவல்லி எஸ். தம்பிமுத்துப்பிள்ளை
1905(?) சுந்தரன் செய்த தந்திரம் " "
பரிமளா-ராகவன்
1916 விஜயசீலம் சி.வை.சின்னப்பபிள்ளை
உதிரபாசம் " "
இரத்தினபவானி " "
1921 கோபால-நேசரத்தினம் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை
1922 மேகவர்ணன் வே.வ.சிவப்பிரகாரம்
1924 காசிநாதன்-நேசமலர் ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை
1924 இராசதுரை செ.செல்லம்மாள்
1924(?) கமலாவதி(?) சபாபதி(?)
1925 நீலகண்டன்
(ஓர் சாதி வேளாளன்) இடைக்காடர்
1925 சித்தகுமாரன் " "
1927 புனிதசீலி Rev.Bro. யோன் மேரி
1927 சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது
நன்னெறிக் களஞ்சியம் அ.நாகலிங்கம்
1929 சரஸ்வதி அல்லது காணாமற் போன
பெண்மணி சு. இராசம்மாள்
1930 பூங்காவனம் மா. சிவராமலிங்கம்பிள்ளை
1932 பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் வரணியூர் ஏ.சி. இராசையா
1934 அரங்கநாயகி வே. ஏரம்பமூர்த்தி
1935 செல்வரத்தினம் வே.க.நவரத்தினம்
1936 அருணோதயம் அல்லது சிம்மக்கொடி சரணியூர் ஏ.சி. இராசையா
1936 (?) மாலை வேளையில் (மொழிபெயர்ப்பு) சி.வைத்திலிங்கம்
1936(?) தேவி திலகவதி
1936 காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி சி.வே.தாமோதரம்பிள்ளை
1938 செல்வி சரோசா அல்லது
தீண்டாமைக்குச் சவுக்கடி எம்.ஏ.செல்வநாயகம்
1938(?) இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி எச்.நெல்லையா
1939(?) சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு " "
1940 (?) காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச்
சாவுமணி (?) " "
(1940-50) சகடயோகம் 'கசின்'
" இராசமணியும் சகோதரிகளும் "
(1950-60) கற்பகம் "
" சொந்தக் கால் "
(1940-50) விதியின் கை உபகுப்தன்
" வெறும் பானை கனக செந்திநாதன்
" வென்று விட்டாயடி ரத்னா வரதர்
" வாழ்க நீ சங்கிலி மன்ன "
" பாசம் சம்பந்தன்
" ரவீந்திரன் 'சுயா'
" ஆப்பக்காரி 'ராமப்பிரேமன்'
" ----- நடேசையர்
" இரு சகோதரர் (முடிவு பெறாதது) பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளை
1942 முதற் காதல் (மொழி பெயர்ப்பு) இலங்கையர்கோன்
1949 மணிபல்லவம் " தேவன்-யாழ்ப்பாணம்
(1940-50) வாடிய மலர்கள் " "
(1950-60) கேட்டதும் நடந்ததும் " "
(1940-50) குந்தளப் பிரேமா கே.வி.எஸ்.வாஸ்
" நந்தினி "
" தாரினி "
" பத்மினி "
" புஷ்பமாலா "
" ஜம்புலிங்கம் "
" சாந்தினி "
" சிவந்திமலைச் சாரலிலே "
(1950-55) மலைக்கன்னி "
" உதயக்கன்னி "
1951 புகையில் தெரிந்த முகம் அ.செ.முருகானந்தம்
1957 யாத்திரை "
1953 அனிச்சமலரின் காதல் வே. தில்லைநாதன்
" பூஞ்சோலை கலாநிதி, க.கணபதிப் பிள்ளை
1954 வாழ்க்கையின் வினோதங்கள் "
1957 பிரேமாஞ்சலி வி.லோகநாதன்
1962 பாரிஸ்டர் சிற்றம்பலம் "
(1950-55) அன்னபூரணி க.சச்சிதானந்தன்
" ஒன்றரை ரூபாய் க.நாகப்பு
" ஏழையின் காதல் "
1954 ஆசை ஏணி த. சண்முகசுந்தரம்
1953 வாடாமலர் சுலோசனா
1952 ரஞ்சிதம் மாயாவி
1950.55 மிஸ் மனோகரி நவம்
1950-55 இவளைப்பார் எம்.ஏ.அப்பாஸ்
" மூன்று பிரதேசங்கள் "
" ஓரே ரத்தம் "
" சி.ஐ.டி, சிற்றம்பலம் "
" சிங்களத்தீவின் மர்மம் "
" யக்கடையாவின் மர்மம் "
" ----- அ.சிதம்பரநாதபாவலர்
" சதியில் சிக்கிய சலீமா டி.எம்.பீர்முகம்மது
" கங்காணி மகள் "
" தங்கப்பூச்சி இராஜ அரியரத்தினம்
" தீண்டாதான் (மொழிபெயர்ப்பு) கே.கணேஷ்
" பண்டிறாளை கே.பீ.முத்தையா
1950-55 காதற் பலி சுதர்ஸன்
1955 மரணத்தின் வாயிலில் சாந்தி
1950-60 காற்றிற் பறந்த கருங்காலிக் குதிரை எம்.செயினால் ஆப்தீன்
1950-55 வீரமைந்தன் சி.சண்முகம்
1953 சிங்கை ஆரியன் வெள்ளிவீதியார்
1950-55 கபட நாடகம் வே.க.ப.நாதன்
1950-60 ஓரே அணைப்பு இளங்கீரன்
" மீண்டும் வந்தாள் "
" பைத்தியக்காரி "
" பொற்கூண்டு "
" கலா ராணி "
" மரணக் குழி "
1950-60 காதலன் இளங்கீரன்
" அழகு ரோஜா "
" வண்ணக் குமரி "
" காதல் உலகிலே "
" பட்டினித் தோட்டம் "
" நீதிபதி "
" எதிர்பார்த்த இரவு "
" மனிதனைப் பார் "
" புயல் அடங்குமா? "
" சொர்க்கம் எங்கே? "
" தென்றலும் புயலும் "
" மனிதர்கள் "
" மண்ணில் விளைந்தவர்கள் "
" நீதியே நீ கேள்! "
" இங்கிருந்து எங்கே? "
" மலர்ப் பலி சொக்கன்
1961 செல்லும் வழி இருட்டு "
1955-60 கொழுகொம்பு வ.அ.இராசரத்தினம்
" துறைக்காரன் "
1961 நெடுந்தூரம் கே.டானியல்
1959 வாழ்வற்றவாழ்வு சி.வி.வேலுப்பிள்ளை
1962 வீடற்றவன் "
1955-60 உனக்காக கண்ணே சிற்பி
" இதயவானிலே உதயணன்
" மனப்பாறை "
" தீ எஸ்.பொன்னுத்துரை
1955-62 வண்ண மலர் எட்டுப் பேர்
1955-62 மத்தாப்பு ஐந்து பேர்
" அலைகள் கச்சாயில் இரத்தினம்
" "
" மாலதியின் மனோரதம் அருள் செல்வநாயகம்
" காண்டீபன்
" சிந்தித்துப் பார் பாயல் தாஹ’ர்
" யார் கொலைகாரன்? மு.வே.பெ.சாமி
" காணிவல் காதலி புதுமைலோலன்
" தாலி "
" கோமதியின் கணவன் த.சண்முகநாதன்
" கொந்தளிப்பு செ.சி.பரமேஸ்வரன்
" காதல் பைத்தியம் "
" கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு எம்.பி.எம். முகம்மதுக் காசிம்
நாகரிக நிர்மலா அல்லது
" மலைக்குறத்தி மகள் வியாசக விதரணன் எஸ் முத்தையா
" ஈரக் கொலை வீ.ஆ. புரட்சிமணி
" நிறுபூத்த நெருப்பு பாத்திமா மொகிதீன்
" பயங்கரக் கனவு ஹுசேன்
" காலேஜ் காதல் தெல்லியூர் செ. நடராஜா



***** ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி *** முற்றும்

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!